text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
வாசகரின் உள்ளத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது தானே ஒரு கதாசிரியரின் குறிக்கோள் பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் படித்திருக்கிறேன்.
12
சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.
3
ஆனால் ஏனோ அவர் எழுத்து என்னைக் கவராததால் தொடர்ந்து வாசிக்கவில்லை.
8
ஜீவி சாரின் புத்தகத்திலிருந்து அம்பையையும் பாலகுமாரனையும் அருமையாக அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் அம்பை மிக முக்கியமானவர்.
16
முற்போக்கான கருத்து கொண்டவர்.
3
அவருடைய கதைகளில் என்னை மிகவும் பாதித்தது அம்மா ஒரு கொலை செய்தாள் என்பது தான்.
11
ஜீவி சாரின் நூலின் மூலம் மட்டுமே இவரையும் அறிந்துகொண்டு இவரின் இந்தக் குறிப்பிட்ட கதையையும் மேலோட்டமாக அறிந்துகொள்ள முடிந்துள்ள எனக்கே இது மிகப்பெரியதோர் பாதிப்பினையும் தாக்கத்தினையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்னும்போது அம்பை அவர்கள் எழுதியுள்ள இந்தக்கதையை முழுமையாக அம்பையின் எழுத்துக்களிலேயே வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ள தங்களையும் பாதித்துள்ளதில் வியப்பேதும் இல்லை தான்.
37
அப்பா எப்போதும் அவளைக் கறுப்பி என்று தான் கூப்பிடுகிறார்.
7
ஆனால் அம்மாவோ அவள் கறுப்பு என்பதற்காக ஒரு நாளும் குறை சொன்னதில்லை.
9
அம்மா வந்தவுடன் உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான் என்று சொல்வாள் என்று ஆசையாக எதிர்பார்க்கிறாள்.
12
பயமுறுத்திய முறுக்குப் பாட்டி கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள்.
12
அம்மா வித்தியாசமானவள்.
2
அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
10
அவளுக்கு எல்லாமே அழகு தான்.
4
தங்கையின் மகள் கறுப்பு என்பதனால் மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்ற எரிச்சலுடன் வீட்டுக்கு வரும் போது நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு என்று நினைவூட்டுகிறார் அப்பா.
22
அந்தச் சமயத்தில் இவள் போய் அம்மா முன் நிற்க அம்மாவின் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பும் இச்சொற்களில் அந்த இளம் மொட்டானது கருகிப் போய்விடுகிறது.
17
ஜீவி சார் நூலின் மூலமாக இவற்றையெல்லாம் நானும் நன்கு உணர முடிந்திருப்பினும் ஒருசில காரணங்களால் என் இந்தப்பதிவினில் இதைப்பற்றி நான் விரிவாக விளக்கிக் கூறாமல் ஆங்காங்கே ஒருவித சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி சுருக்கிக்கொண்டு விட்டேன்.
25
ஏதோ மர்மமான ஒன்றை இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன்.
25
வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள்.
8
நான் அழப் போகிறேன் உரக்க.
4
அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.
8
தெரிந்தோ தெரியாமலோ அக்குழந்தையின் ஆன்மாவை ஆசையை எதிர்பார்ப்பை நம்பிக்கையை உற்சாகத்தைக் கொலை செய்து விடுகிறாள் அம்மா.
12
எனவே அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற தலைப்பு மிக மிகப் பொருத்தமானது.
10
இவையெல்லாம் நான் எனக்குள் யூகித்ததுதான் என்றாலும் இவையெல்லாம் மூலக்கதையினை நேரிடையாகப் படித்துள்ள தங்களின் மூலம் மட்டுமே விளக்கமாகக் கேட்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மேடம்.
19
கறுப்பு என்றால் கேவலம் மட்டம் என்று அதுவரை தவறாக திமிராகவும் கூட நினைத்திருந்த நான் என்னைத் திருத்திக் கொண்டது இக்கதையைப் படித்துத் தான்.
17
அந்தளவுக்கு இப்பெண் குழந்தையின் உணர்வுகள் என்னைக் கடுமையாகப் பாதித்தன.
7
உலகில் எவ்வளவோ கோடிக்கணக்கான மனிதர்கள் இருப்பினும் ஒருவரைப்போல மற்றொருவர் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.
13
இருப்பினும் நாம் ஒருவரைப்பற்றி அடையாளம் சொல்ல ...... முன்தலை வழுக்கையாக இருக்கும் பின் தலை வழுக்கையாக இருக்கும் சுத்தமாக வழுக்கையாக இருப்பார் அடர்த்தியான சுருள் முடியுடன் இருப்பார் விக் வைத்திருப்பார் நரை முடியில் டை அடித்திருப்பார் ....... உருவமோ நிறமோ தோற்றமோ எப்படியிருப்பினும் அவர்களுக்குள்ளும் ஓர் ஏக்கமும் எதிர்பார்ப்பும் உணர்வுகளும் சராசரி ஆசைகளும் ஆசாபாசங்களும் இருக்கத்தான் செய்யும்.
41
அதுபோலத்தான் இந்த கறுப்பான சின்னக் குழந்தைக்கும் மனதில் ஓர் ஆசையும் தன் அம்மாவிடமிருந்து ஓர் நியாயமான எதிர்பார்ப்பும் இருந்துள்ளது.
14
தங்களுக்குள் இந்தக்கதை ஓர் பாதிப்பினை ஏற்படுத்தியதும் அதனால் ஏற்பட்ட தங்களின் மனமாற்றமும் தங்களைத் தாங்களே திருத்திக்கொண்டதும் அதை இங்கு பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளதும் மிகவும் பாராட்டத் தக்க செயல்கள் ஆகும்.
21
என்னைப் போல் எத்தனை பேர் இக்கதையை வாசித்துத் தங்கள் தவறைத் திருத்திக் கொண்டார்களோ?
10
வாசகரின் உள்ளத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது தானே ஒரு கதாசிரியரின் குறிக்கோள் பாலகுமாரனின் இரும்புக்குதிரைகள் படித்திருக்கிறேன்.
12
சிறுகதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.
3
ஆனால் ஏனோ அவர் எழுத்து என்னைக் கவராததால் தொடர்ந்து வாசிக்கவில்லை.
8
நன்றாகவே இதனை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
5
எல்லோருடைய எழுத்துக்களும் எல்லா வாசகர்களுக்கும் பிடித்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை.
8
என் மனதை மிகவும் பாதித்துள்ளது.
4
என்னுடைய டேஸ்ட் அதுபோல அமைந்துள்ளது.
4
அதுவே உங்களுக்கும் பிடித்துள்ளது உங்களையும் வெகுவாக பாதித்துள்ளது என்பது கேட்க எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
12
ஜீவி சாரின் புத்தகத்திலிருந்து அம்பையையும் பாலகுமாரனையும் அருமையாக அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார் தங்களின் அன்பான தொடர் வருகையும் தங்களின் மனதில் பட்டதை உள்ளது உள்ளபடி விரிவாக எடுத்துக் கூறிவருவதும் இந்த என் தொடருக்கே மிகவும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளது.
30
தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள் மேடம்.
6
நன்றியுடன் கோபு.
2
ஜீ.வி சாரின் ஒரு கதையை அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையுடன் ஒப்பிட்டு நான் எழுதிய பின்னூட்டத்தின் மூலம் இந்நூலில் அம்பையைச் சேர்க்க நினைவுபடுத்தியிருக்கிறேன் என்றறிய மகிழ்ச்சி.
22
ஜீ.வி சாரின் ஒரு கதையை அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற கதையுடன் ஒப்பிட்டு நான் எழுதிய பின்னூட்டத்தின் மூலம் இந்நூலில் அம்பையைச் சேர்க்க நினைவுபடுத்தியிருக்கிறேன் என்றறிய மகிழ்ச்சி.
22
எனக்கும் இதில் மிக்க மகிழ்ச்சியே.
4
தங்களின் இந்த செயலால் மட்டுமே அவரும் அம்பை அவர்களை தன் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தன் நூலில் கொண்டுவந்து சிறப்பித்துள்ளார்.
14
அதனால் அம்பை அவர்களைப்பற்றியும் அவரின் அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற மிகச்சிறப்பானதோர் கதையினைப் பற்றியும் என்னாலும் அறிந்துகொள்ள முடிந்தது.
15
அம்பையின் எழுத்துகளை வாசித்ததில்லை.
3
ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வாசித்திட வேண்டும் என்று தோன்றுகின்றது.
13
அதுவும் பெண்ணீயம் சார்ந்த கருத்துகள் நிலவும் என்று தோன்றுவதால்... பாலகுமாரன் கதைகளை வாசித்ததுண்டு தாயுமானவர் என்று சில தொடராக வந்தவை.
15
ஆனால் ஏனோ இப்போது அந்த ஆர்வம் இல்லை... அம்பையின் எழுத்துகளை வாசித்ததில்லை.
9
ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் மிகவும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் கண்டிப்பாக வாசித்திட வேண்டும் என்று தோன்றுகின்றது.
13
அதுவும் பெண்ணீயம் சார்ந்த கருத்துகள் நிலவும் என்று தோன்றுவதால்... பாலகுமாரன் கதைகளை வாசித்ததுண்டு தாயுமானவர் என்று சில தொடராக வந்தவை.
15
ஆனால் ஏனோ இப்போது அந்த ஆர்வம் இல்லை... புரிகிறது.
7
நம் ஆர்வம் ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் ஒவ்வொரு மாதிரியாகத்தான் மாறிக்கொண்டே இருக்கக்கூடும்.
8
ஒரு காலக்கட்டத்தில் நாம் அந்தக்கால புதிய சினிமாக்களை மிகவும் ரசித்துப்பார்த்திருப்போம்.
8
அதே படத்தினை இன்று மீண்டும் பார்க்க நேர்ந்தால் அப்போது நமக்கு இருந்த ஓர் ஆர்வம் நிச்சயமாக இருக்காது.
13
தங்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே.
9
அன்புடன் அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன்.
5
பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன.
10
அம்மா ஒரு கொலை செய்தாள் இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை.
8
ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
11
தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.
6
பாலகுமாரனின் படைப்புகள் சிலவற்றை வாசித்திருந்தாலும் பெரிய அளவில் ஈர்ப்போ பாதிப்போ எழவில்லை.
9
அம்பையின் பல படைப்புகளை வாசித்துள்ளேன்.
4
பெண்மையின் நுட்பமான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் அவருடைய சிறுகதைகள் பலவும் என்னைப் பாதித்துள்ளன.
10
அம்மா ஒரு கொலை செய்தாள் இன்னும் வாசிக்க வாய்ப்பு அமையவில்லை.
8
ஆனால் இங்கு தாங்களும் கலையரசி அக்காவும் சுட்டிய வரிகளிலிருந்து அச்சிறுபெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
11
தாய்மைக்கும் நிறமுண்டு என்பதை சுட்டும் அருமையான கதை.
6
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் நான் மிகவும் ரஸித்த வரிகளான தாய்மைக்கும் நிறமுண்டு உள்பட இதே தலைப்பில் ஓர் சிறுகதை எழுதலாமோ என என்னை நினைக்க வைத்தது அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.
30
அம்பையின் எழுத்துக்களிலேயே அம்மா ஒரு கொலை செய்தாள் கதையை வாசித்துள்ள திருமதி.
9
ஞா.
1
கலையரசி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் மிகவும் ஆழமானதும் அசத்தலானதும் ஆச்சர்யமானதும் ஆகும்.
9
சங்கல்பம் விகல்பம் ஏதும் இல்லாமல் தங்கள் மனதுக்குத் தோன்றியதை மிகச்சரியாக பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சியே.
10
அவர் தற்சமயம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருப்பதால் கூடிய சீக்கரம் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12
தான் பெற்ற பெண் வளர வளர பெருமிதமடைய வேண்டிய தாய்க்கு சமூகத்தின் சில அவலங்கள் அவளைக் கவலை கொள்ள வைக்கின்றன.
15
இந்தக் கதையில் வரும் தாய் தான் போய் வந்த வெளியூர் உறவுக்கார பெண் பார்க்கும் படலத்தில் பெண் கருப்பு என்ற காரணத்தினால் ரிஜக்ட் ஆன வேதனையை தரிசிக்கிறாள்.
20
தன் பெண்ணும் கருப்பு என்கிற காரணத்தினால் தன் பெண்ணுக்கும் கற்ப்னையில் இதைப் பொறுத்திப் பார்த்து அவள் மனம் வேதனை அடைகிறது.
15
ஊருக்குத் திரும்பியவள் சொல்லி வைத்தாற் போல தன் பெண் பருவமடைந்த செய்தி கேள்விப் பட்டு சந்தோஷமடைய வேண்டியவள் மாறாக சமீபத்திய இந்த கறுப்பு தந்த வேதனையில் இந்த எழவுக்கு என்னடீ அவசரம்?
23
என்று கரிப்பைக் கொட்டுகிறாள்.
3
அது ஒரு நிமிட சலனம்.
4
அவ்வளவு தான்.
2
அடுத்த வினாடியே அது சரியாகப் போகப் போகிறது.
6
தாயின் அந்த எரிச்சலுக்குக் காரணம் சமூகத்தின் கோணல் மாணல்கள்.
7
ஆனால் அம்பையோ கதையை அந்தப் பெண் பார்வையில் பார்க்கிறாள்.
7
தன் அன்புத் தாயின் எதிர்பாராத அந்த சீறலைக் கேட்டவுடனேயே அந்தப் பெண்ணின் மனம் நொறுங்கிப் போவதாகக் காட்டி அந்தத் தாயு ஒன்றும் தெரியாத அந்தப் பெண்ணின் மனதைக் கீறி ரணமாக்கி விட்டதாகக் கொண்டு அம்மா ஒரு கொலை செய்தாள் என்று கதையாக்கியிருக்கிறார்.
30
எல்லாத் தாய்மார்களும் தன் பெண்ணைத் தானாகவேப் பார்க்கிறார்கள் என்பது சிக்மண்ட் ப்ராய்டின் மன ஆராயுச்சிகள் சொல்லும் பாடம்.
13
இப்படியிருக்க அந்த அன்னையின் வேதனையில் வெளிப்பட்ட ஒற்றைச் சொல்லை பெரிசுபடுத்தி அம்மா ஒரு கொலை செய்தாள் என்று கதையாக்கியிருக்கிறார் அம்பை.
15
பெண்ணியப் பதாகையைத் தூக்கிப் பிடிப்போருக்கு அந்த அம்மாவும் ஒரு பெண் தானே என்கிற பார்வை இல்லாமல் போனது வேதனையான ஒன்று.
15
இந்தக் கதை அம்பையின் ஆரம்பக் கதைகளில் ஒன்று என்பதினால் அவரது பிற்கால வளர்க்சியைக் கணக்கில் கொண்டு இப்பொழுது இதேக் கதையை அதே அம்பை எழுதினால் வேறு மாதிரி எழுதுவார் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
25
நீங்களே சொல்லியிருப்பது போல் கதை பதிமூன்று வயதுடைய ஒரு பெண் குழந்தையின் கோணத்திலிருந்து சொல்லப்படுகின்றது.
11
அம்மாவின் கோணத்திலிருந்து அல்ல.
3
அம்மாவின் சீற்றத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
5
அவை தம் பெண்ணின் நல்வாழ்வைப் பொறுத்த கவலைகள் தாம்.
7
அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
4
ஆனால் அவையெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது அதற்கு அவசியமுமில்லை.
10
அக்குழந்தை வளர்ந்து ஆளாகும் போது அம்மாவின் வார்த்தைகளில் இருந்த எரிச்சலுக்கும் கோபத்துக்கும் காரணம் கண்டிப்பாகத் தெரியவரும்.
12
கதையின் கரு அதுவல்ல.
3
ஒரு பெண் குழந்தை பருவமடையும் போது அவள் மனநிலையில் ஏற்படும் குழப்பம் தடுமாற்றம் அம்மாவிடம் அடைக்கலம் தேடும் பய உணர்வு ஆகியவற்றை அம்பை மிக அற்புதமாக இக்கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் அவரும் இப்படிப்பட்ட கட்டத்தைத் தாண்டி வந்திருப்பதால்.
26
வீட்டில் யாராவது எப்போதும் நம்மை திட்டிக்கொண்டே இருந்தால் அதை நாம் சட்டையே செய்ய மாட்டோம்.
11