text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
ஆனால் அதே சமயம் அதிகம் திட்டாதவர் நம் மீது மிகவும் பிரியமாக இருப்பவர் சாதாரணமாக ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும் அது நம்மைப் பெரிதாகப் பாதிக்கும்.
20
அது போலவே இந்தக் குழப்பத்திலிருந்து அம்மா நம்மை விடுவிப்பாள் எப்போதும் போல் அரவணைத்து ஆறுதல் சொல்வாள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செல்பவளுக்கு இனிமே நீ எனக்கொரு பாரம் என்று அம்மாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தீயாகச் சுட்டுப் பொசுக்குகின்றன.
28
அம்மாவின் உதடுகளும் நாசியும் நெற்றிக் குங்குமமும் மூக்குப் பொட்டும் கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது.
14
அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள் அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது.
29
தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.
7
தன் அம்மாவை ஜ்வாலையின் பிம்பமாக அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பாக தேவ ஸ்வரூபமாக கதையின் துவக்கத்திலிருந்தே அடிக்கடி கற்பனை செய்வதாகக் காட்டுகிறார் எழுத்தாளர்.
17
கடைசியில் அவள் தேவ பிம்பம் மறைந்து வெறும் மனித அம்மாவாக அவள் கண்களுக்குக் காட்சி தருகிறாள்.
12
அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா நானே நினைத்தேனா தெரியவில்லை.
9
என்று அக்குழந்தை நினைப்பதாக அம்பை சொல்கிறார்.
5
தன் அம்மாவைப் பற்றிய அக்குழந்தையின் யதார்த்தத்துக்கு ஒவ்வாத அதீத கற்பனை கூட அவள் அளவுக்கதிகமாக மனம் நொறுங்கியதற்கு தன்னைக் கொலை செய்ததாக நினைக்குமளவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
20
இங்கு அம்பை சமூகச் சீர்கேடுகளுக்கு அம்மாவைக் குற்றம் சாட்டவில்லை.
7
நமக்கு எவ்வளவு தான் பிரச்சினைகள் இருந்தாலும் நம் வெறுப்பையும் எரிச்சலையும் குழந்தைகளிடம் காட்டி அவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது என்பதே இக்கதையிலிருந்து பெறக்கூடிய நீதியாக நான் கருதுகிறேன்.
20
அந்தக் கதையைப் படிக்காமலேயே என் கருத்தைச் சொல்வது சரியில்லைதான்.
7
எனினும் ஜீவி ஸார் சொல்லி இருப்பது போல படைப்பாளி யாருடைய பார்வையிலிருந்து கதையைப் படைக்கிறார் என்பதைப் பொறுத்துதான் பெரும்பாலான வாசகர்கள் பார்வை அமைகிறது.
17
பல வாசகர்கள் அதைத் தாண்டி வேறு விதமாக்கவும் யோசிக்கிறார்கள்.
7
அந்தச் செயலையும் சிலவேளை எழுத்தாளரே மறைமுகமாகத் தூண்டுகிறார்.
6
பெரும்பாலான சமயங்களில் படிக்கப்படும் அந்தப் படைப்பு வாசகனின் வாழ்வனுபவத்தோடு ஏதோ ஒரு வகையில் எங்கோ ஓரிடத்தில் ஒன்றுகிறது.
13
எதையோ நினைவு படுத்துகிறது.
3
அதை ஒட்டியும் வாசகனுக்கான பாதிப்பு நேர்கிறது.
5
கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காட்சி.
7
முதலாளியின் மகள் தன்னை விரும்புவதாக நினைத்து ஏமாந்த கதாநாயகன்.
7
அவன் உயரத்தில் மிகக் குறைந்தவன்.
4
நண்பர்களுக்கு மட்டுமே அவன் தோல்வி தெரியும்.
5
நிலை உணராத அவன் தாய் முதலாளியிடம் அவர் மகளின் காதல் குறித்து சமாதானம் செய்யும்போது மாப்பிள்ளை என் மகன் போலக் குள்ளனாக இருந்தாலும் நீங்கள் மறுக்கலாம் என்பது போலச் சொல்வதைக் கேட்கும் நாயகன் உடையும் இடமும் பின் தொடரும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன.
31
எழுத்துலகில் அதுவும் இதுபோன்ற இரு பண்டிதர்கள் மத்தியில் சூடான சுவையான விவாதங்கள் நிகழ்வது மிகவும் ஆரோக்யமானதும் சுவாரஸ்யமானதுமாகவே இருக்கக்கூடும்.
14
அம்பை அவர்கள் எழுதிய அந்த முழுக்கதையையும் நான் இப்போது படித்து முடித்துவிட்டேன்.
9
ராமபாணமான அம்பைப் போல அது என்னிடமிருந்து தங்களை நோக்கி வெகு வேகமாகப் புறப்படத் தொடங்கிவிட்டது.
11
தாங்களும் படித்து மகிழுங்கள்.
3
ஸ்வாஹா என அக்னிக்கு நெய் ஊற்றுவதுபோல இந்த விவாதங்களுக்கு உங்கள் பங்குக்கு கொஞ்சம் நெய் ஊற்றி அக்னி அணையாமல் மேலும் கொழுந்து விட்டு எரியச்செய்து புண்ணியத்தைக் கட்டிக்கொள்ள உதவலாம்.
21
அம்மா ஒரு கொலை செய்தாள் கதையை வாசிக்காவிடினும் இங்கு சுட்டப்பட்ட கருத்துகளைக் கொண்டு தாய்மைக்கும் நிறமுண்டு என்று குறிப்பிட்டேன்.
14
அது சரியல்லவென்று தாங்கள் சுட்டி அளித்த விளக்கத்துக்கு மிகவும் நன்றி ஜீவி சார்.
10
இன்று கோபு சாரின் தயவால் முழுக்கதையையும் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.
8
இப்போது அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
7
ஆனாலும் தங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடத்தான் செய்கிறேன்.
6
இந்தக் கதை ஒரு பதிமூன்று வயதுப் பெண்ணின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அந்த நேரத்தில் அச்சிறுமியின் மனப்பிரதிபலிப்பு அப்படித்தான் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
17
எழுதியவர் அம்பை என்பதால்தான் இவ்வளவு விமர்சனம் என்பதும் புரிகிறது.
7
அந்தச்சிறுமியின் நிலையில் என்னையோ என் பெண்ணையோ இருத்திப் பார்த்தாலும் அந்த மனநிலை மாறவில்லை.
10
அந்த பதிமூன்று வயது பெண்ணுக்கு என்ன இது?
6
எதனால் இது?
2
என்ற குழப்பம் ஓரளவு முருக்குப் பாட்டியின கவனிப்பால் தீர்ந்திருக்கும் என்றாலும் அம்மா உதிர்த்த வார்த்தைகள் தீயாகச் சுட்டிருக்கும் என்று கொண்டாலும் பெற்ற அம்மாவின் அந்த வெடிப்புக்கும் அம்பையே தகுந்த காரணமும் சொல்லியிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
26
என்று விடை தெரியாத கேள்வியாய் திகைக்க வைத்திருக்கலாம்.
6
மறுப்பதற்கில்லை.
1
ஆனால் இப்படி ஒவ்வொன்றுக்கும் பெற்றோர்கள் பார்த்து பார்த்து தங்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்பும் தீங்கானதே.
13
வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியவர்களுக்கு இப்படித் தொட்டாற்சுருங்கியாய் இருக்கும் மனநிலையும் ஒரு மனரீதியான குறைபாடாகவே எதிர்காலத்தில் ஆகிப்போகும்.
12
அந்த நிகழ்வு நடக்காது நாள் தள்ளிப் போனாலும் அந்தத் தாயே நொந்து நூலாகிப் போவாள் என்பதையும் என் நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
15
எல்லாம் கதாசிரியர்கள் பண்ணுகிற வேலை.
4
தாங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர்கள் அவர்கள்.
11
அதெல்லாம் போகட்டும்.. தன் பெண்ணுக்கு இஜ்த பெருமைமிகு நிகழ்வு நடைபெறும் பொழுது அந்தத் தாயின் மனநிலை எப்படியிருக்கும்?..
13
இந்தக் கதையை அம்பை அவர்கள் எழுதுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் எழுதிய சிறுகதை ஒன்று பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது.. வான்மதி என்ற அந்தப் பத்திரிகையும் அம்பை அந்தக் காலத்தில் வாழ்ந்த கோவையிலிருந்தே வெளிவந்திருப்பதும் ஆச்சரியம் குருஜி.... வரவேணாம்னுதா நெனச்சி பிட்டேன்.. படங்கள் அல்லா என்ன வா வா னு கூப்பிடுது... மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்வஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது.... அச்சச்சோ ... அப்படியெல்லாம் அந்த ரோஜா டீச்சர் போல நினைக்கவே கூடாது.
58
வேண்டாம் அப்புறம் நான் அளுதுடுவேன் ..... மேல ரோஸாபூவு பட்டர்ப்ளை சொலிக்குது.... பொறவால நெக்லஸு...... மூடி மூடி தொறக்குற ரோஸாபூவு அல்லாமே நல்லாகீது.... முருகு நீங்க மட்டும்தான் இதையெல்லாம் பற்றி அழகா ரசித்துச் சொல்லியிருக்கீங்க.
25
மொத்தத்தில் மிகவும் வெவரமான புத்திசாலிப் பொண்ணு நீங்க.
6
வாழ்க உங்கள் பார்வையில் எல்லாம் சரியே.
5
கருத்தை சரியாகக் கையாளவைல்லை என்று சொல்ல வந்தது கருத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்ற அர்த்தத்தில்.
12
அந்த அம்மா தன் பெண்ணின் மேல் வைத்திருந்த பாசமும் அன்பும் அந்த நாளே அவளைப் பக்கத்தில் அம்ர்ந்திக் கொண்டு பேச வைத்திருக்கும்.. தன் அம்மா சொல்வதை வேதவாக்காகக் கொள்ளும் அந்தப் பெண்ணும் அன்றே சகஜமான அம்மாவின் உரையாடலால் சரியாகியிருப்பாள்.
28
இதுவே யதார்த்தம்.
2
ஆனால் கதையை இப்படித் தான் எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணி விட்டு அதற்காக முன்னேற்பாடுடன் கூடிய அடித்தளமும் அமைத்து எழுதும் பொழுது நீங்கள் சொல்வது மாதிரி தான் எடுத்துக் கொள்ள தோன்றும்.
24
கதாசிர்யர் எழுதியிருக்கிற எடுத்துக் காட்டுகளைக் கோண்டு கதையை நியாயப்படுத்த முயற்சித்தால் இதில் ஒன்றும் தப்பில்லையே என்று தான் நினைக்கத் தோன்றும்.
15
வறுமையான குடும்பங்களில் அடுத்தடுத்துக் குழந்தையைப் பெற்ற அந்தக்கால வாயும் வயிறுமாக இருந்த தாய்மார்கள் கூட் இது இல்லேன்னு இப்போ யார் அழுதா?
16
என்று அலுப்பில் சொல்லிக் கொண்டதுண்டு.
4
குழந்தை பிறந்ததும் அந்த வெறுப்பும் அலுப்பும் போன இடம் தெரியாது.
8
எத்தனை குழந்தைகள் இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு அமுலில் இல்லாத அந்தக் காலத்தில் குழந்தைகளின் பிறப்பை ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள்.
14
இந்த இழவு இல்லேன்னு இப்போ யார் அழுதா?
6
என்ற ஒரே ஒரு சுடுசொல் அசந்தர்ப்பமாய் அந்த அம்மா வாயிலிருந்து வந்ததற்கு தன் பெண்ணின் மனசை ஹதம் பண்ணிவிட்டதாக அதீத கற்பனை கொள்ளுமாறு கதையை நடத்திச் சென்றிருக்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.
24
ஆண்களுக்கு பிடித்ததை அவர்கள் விரும்புவதை ஆதரிப்பதே ஒரு காலத்து வழக்கமாக இருந்தது.
9
இந்த கருப்பு ஒதுக்கல் சிவப்புத் தோலின் ஆசை எல்லாம் அந்த அடிப்படையில் தீர்மானம் ஆனவை.
11
அந்த அம்மாவின் குழப்பமும் அந்த ஆண் ஆதிக்க வலையில் சிக்கிக் கொண்டதினால் தான்.
10
எங்கேடி இந்த கருப்பு?
3
என்று விளிக்கிற மாதிரியில் தன் பெண்ணை அழைக்கிறார்.
6
கருப்பு என்றே தன்னை அழைப்பதற்கு பழக்கப்பட்டுப் போன பெண்ணுக்கு விளக்கிச் சொல்லும் பொழுது கருப்பு ஒன்றும் பிரச்னையாகிப் போயிருக்காது.
14
நீ எப்படிம்மா இப்படி வெளுப்பா இருக்கே?
5
என்று பெண் கேட்கும் பொழுது கருப்புவெளுப்பில் என்னடி இருக்கு?
7
என்று சொல்லின் சீராட்டலில் குழந்தையை வளர்த்திருக்க வேண்டும்.
6
பருவமடைந்த குழந்தையைக் கட்டிக் கொண்டு கருப்பா இருந்தா என்ன?..
7
இவளுக்கென்று ஒரு ராஜா பிறந்திருப்பான் பாருங்கோ என்று தன் புருஷனிடம் அந்த அம்மா சொல்வதாக கதையைக் கொண்டு போயிருந்தால் இந்த கருப்பு விஷயம் பிரதானப்பட்டிருக்காது.
18
நான் வெளுப்பு நீங்கள் கருப்பு..
4
நமக்காகலையா?..
1
அந்த மாதிரி தான் நம் பெண்ணுக்கும் நடக்கும் பாருங்கோ.. என்று அவள் சொல்வதாக அவள் கணவனின் நிறத்தைக் கருப்பாக்கி கருப்பை சாதாரணமான விஷயமாக்கியிருக்க லாம் மட்டுமில்லை.. பெண்ணின் கருப்பு நிறத்திற்கு காரணம் கூடச் சொல்லியிருக்கலாம்.
25
இந்தக் குடும்பமும் பெண்ணின் கருப்பை பெரிதாக நினைத்துக் குழம்பாமல் கருப்புக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும்.
10
அந்த கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல் பிரதானப்படுத்தியிருந்தாலும் அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு இந்தக் கதையில் முக்கியப் படுத்தியிருந்தால் அது கருப்பை வெறுத்த அந்தக்கால நிற ஒதுக்கலுக்கு எதிரான போர்க்கொடி உயர்த்திய அந்தஸ்த்தை இந்தக் கதை பெற்றிருக்கும்.
27
இன்றைய பெண்ணியக்கம் சாரந்த எண்ணம் கொண்டவராஉ அன்றைய அம்பை அவர்கள் இல்லாதிருந்திருக்கலாம்.
9
குறைந்தபட்சம் இந்த அம்மா ஒரு கொலைச் செய்தாள் என்று கதையை எழுதும் பொழுது.
10
அதனால் தான் கதை அப்படி அமைந்து விட்டது.
6
இன்றைய அம்பையாய் இருந்தால் இந்தக் கதையையே வேறு மாதிரி எழுதுவார் என்று அதற்காகத் தான் சொன்னேன்.
12
கலைமகளில் தொடராக வந்து பரிசு பெற்ற தன் அந்திமாலை கதையை நினைத்தால் எனக்கு சிரிப்பாகத் தான் வருகிறது என்று அம்பையே சொல்லுவார்.
16
அந்த அளவுக்கு அவரது பிற்கால வளர்ச்சி இருந்திருக்கிறது.
6
இந்தக் கதையே சிவசங்கரி எழுதியிருந்தால் நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
8
எழுதியிருப்பது அம்பை என்பதால் தான் நம் எதிர்பார்ப்பு கூடிப் போயிருக்கிறது.
8
அந்தக் கருப்பு விஷயத்தைப் பிரதானப்படுத்தாமல் பிரதானப்படுத்தியிருந்தாலும் அந்தக் கருப்பைப் பொருட்படுத்தாத ஒரு தீர்வு இந்தக் கதையில் முக்கியப்படுத்தியிருந்தால் அது கருப்பை வெறுத்த வெறுக்கிற நிற ஒதுக்கலுக்கு எதிரான அந்தஸ்தை இது பெற்றிருக்கும் என்று தாங்கள் சொல்லியிருப்பது சரியே.
27
அம்பை என்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது என்பதும் உண்மை தான்.
7
இக்காலத்தில் அம்பை இதை எழுதியிருப்பாரே யானால் என் திறமையை மதிக்காது என் நிறத்தை மட்டுமே பார்க்கும் ஒருவனை நான் திருமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று அப்பெண் போர்க்கொடி உயர்த்தி நிராகரிப்பதாக எழுதியிருப்பாரோ என்னவோ?
24
என் கருத்துக்களையும் பொறுமையாகப் படித்து ரசித்துப் பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி ஜீவி சார் என் கருத்தை வெளியிட்ட திரு கோபு சார் அவர்களுக்கும் என் நன்றி.
19
அன்புள்ள .. அவர்களுக்கு வணக்கம்.
4
நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர்.
8
எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை.
7
அவர் எழுத்துச் சித்தர் ஆன பிற்பாடுதான் கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன்.
12
அதிலும் அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
12
காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த மேலத் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான்.
8
நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாலகுமாரன் அவர்கள் அறிமுக எழுத்தாளர்.
8
எனவே அப்போது அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்தது இல்லை.
7
அவர் எழுத்துச் சித்தர் ஆன பிற்பாடுதான் கடந்த சில வருடங்களாக அவரது நூல்களை வாசித்து இருக்கிறேன்.
12