text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அதை இந்த மகராஜா குடும்பம் இத்தனைநாள் தன் கையிலே வைத்திருந்திருக்கிறது.
8
அதில் ஒரு பத்து வைரத்தை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றிருந்தால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள்.
13
ஆனால் அவருடைய மொத்தக் குடும்பமும் கீழ் நடுத்தர நடுத்தர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள்.
10
கடைசி வரைக்கும் மகாராஜா ஒரு அம்பாசிடர் காரை அவர்தான் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
11
அவருடைய குடும்பத்தில் வாரிசுகள் யாருமே பணக்காரர்கள் கிடையாது.
6
ஆனால் அவர்களுக்குத் தெரியும் அந்தச்செல்வம் அங்கிருப்பது யோசித்துபாருங்கள் உலகத்தின் மகத்தான செல்வத்தின் மேல் அமர்ந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ அவர்களால் முடிந்தது.
17
நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நிலை அது.
7
டாக்டர் அ.கா.பெருமாள் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
7
அது திருவனந்தபுரத்தில் இருக்கும் மதிலகம் ஆவணங்களையும் திருவனந்தபுரத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களையும் தொகுத்து போடப்பட்ட ஒரு ஆய்வுநூல்.
12
முதலியார் ஆவணங்கள் என்று அதற்கு பெயர்.
5
குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் முதலியார் என்ற குடும்பத்தில் இருந்த ஓலைகள் அவை.
11
அவற்றில் கணிசமான பகுதியை ஏற்கனவே கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பதிப்பித்திருக்கிறார்.
8
எஞ்சிய ஓலைகளை அ.கா.பெருமாள் அவர்கள் பார்த்து பிழை தீர்த்து பதிப்பித்திருக்கிறார்.
8
அந்த நூல் எனக்கு நெருக்கமானது.
4
ஏனென்றால் எனக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் அது.
6
அந்த நூலில் ஒரு கடிதம் இருக்கிறது.
5
அழகிய பாண்டியபுரம் முதலியார் குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டு மக்களின் வரியை வசூலித்து மன்னருக்கு கொடுக்கும் பொறுப்பில் இருந்தவர்.
14
அழகிய பாண்டியபுரம் முதலியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் எழுதிய கடிதம் அதில் இருக்கிறது.
9
அதில் மன்னர் சொல்கிறார் பதினைந்து நாட்களுக்குள் அரிசியை அரண்மனைக்கு அனுப்பி வைக்கவும்.
9
இல்லையென்றால் இங்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும் என்று.
5
உண்மையிலேயே பலமுறை சாப்பாட்டுக்கு கஷ்டமான நிலைமை திருவிதாங்கூர் அரசருக்கு வந்திருக்கிறது.
8
ஏனென்றால் வெள்ளையரின் வரிவிதிப்பு அப்படி.
4
வருடாவருடம் வரி ஏறிக்கொண்டே செல்லும்.
4
அது திருவிதாங்கூர் அரசரின் வருமானத்துக்கு ஏற்ற வரி அல்ல வெள்ளை அரசின் தேவைக்கு ஏற்ற வரி.
12
ஆகவே கடுமையான நெருக்கடி.
3
ஆனால் ஒருபக்கம் அவர் உலகத்திலே மிகப்பெரிய செல்வத்தை கையில் வைத்திருக்கிறார்.
8
மறுபக்கம் பட்டினி.
2
தொடர்ந்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிக மிக ரகசியமான குலச்செல்வமாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
11
வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு நாணயம் கூட இருந்திருக்காது.
6
நண்பர்களே திருச்செந்தூர் ஆலயத்திலும் ஸ்ரீரங்கம் ஆலயத்திலும் சிதம்பரம் ஆலயத்திலும் இதே போன்ற நிலவறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
11
அங்கே எதுவுமே இல்லை.
3
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நிலவறைகள் இருக்கின்றன.
6
இந்த ஒரு ஆலயம் மட்டும் தான் செல்வத்தோடு இருக்கிறது.
7
அப்படியெனில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கிறது அது எங்கு சென்றிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
10
இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான்.
5
அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும் காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும் என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார்.
21
அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது.
10
அந்தக்கால பார்வை அது.
3
ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது அந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன.
13
திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான்.
6
அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது.
8
சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது.
5
நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை.
3
தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார்.
5
இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.
7
நண்பர்களே தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர்.
10
பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை.
7
நவீனத்துவ அறம் வேறு.
3
அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள்.
5
வணிகப்பண்டம்.
1
நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது.
4
பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது.
3
ஆனால் அங்கே உணவு அன்னம் தெய்வ வடிவம்.
6
பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.
3
மகாராஜா கஞ்சித்தொட்டி திறப்பதற்கு அந்த ஊரிலிருந்தே தேவையான செல்வத்தை சேர்ப்பவதற்குரிய அமைப்பை உருவாக்கினார்.
10
இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால் அன்றைக்கு பஞ்சகாலத்தில் அப்படி ஓர் அமைப்பை ஊரிலிருந்து உருவாக்க முடியாது என்று.
13
அவ்வளவு பணம் அன்று மக்களிடம் இல்லை.
5
மகாராஜா வரும்போது அவர்தான் கையோடு பணம் கொண்டு வந்திருக்கிறார்.
7
ஆனால் ஊரில் எவரிடமாவது கொடுத்து உங்கள் செலவாக நீங்கள் நடத்துங்கள் என்று சொன்னார்.
10
அந்தச் செல்வம் அனந்தபத்மநாபனின் கருவூலத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும்.
6
அதற்கு அந்தப்பணத்தை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது.
5
ஆனால் தனக்கு என்று எடுக்க மனம் வரவில்லை.
6
மகாராஜாவையே அதற்காக வற்புறுத்தினார்.
3
அவர் அதற்கு சொன்ன காரணம் திருவிதாங்கூர் தனித்து நின்றால் மிகவளமான நாடாக ஆகமுடியும் அதற்கான நிதி இருக்கிறது என்பதே.
14
அவரை ஒரு சரியான மரபுவழிப் பிராமணர் என்று சொல்லலாம்.
7
அவர் மகாராஜாவின் ஊழியர் அமைச்சர்.
4
மகாராஜாவுக்கு எது சிறந்ததோ அதைச் சொன்னார்.
5
திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தால் இந்தியா என்ற வறுமை நிறைந்த நாட்டின் பிரதிநிதியாக ஆகவேண்டியிருக்கும்.
10
உண்மையில் திருவிதாங்கூர் மிகப்பணக்கார நாடு என்றார்.
5
அவர் கடிதங்களில் நெடுங்காலம் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே இருந்தது.
9
இன்றைக்கு இந்த பெரும் செல்வம் தெரியவந்தபிறகு அந்தக் கடிதங்களை பார்த்தால் அவர் என்ன சொல்கிறார் என்று புரிகிறது என்கிறார்கள்.
14
ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவருக்கெதிராக கலவரம் செய்தார்கள்.
5
மணி என்னும் கம்யூனிஸ்ட்காரர் அவரை வெட்டினார்.
5
திருவிதாங்கூர் மகாராஜா அவரை வேலையை விட்டு நீக்கினார்.
6
அய்யர் வேலையை விட்டு நீங்கும் போது தன் சம்பளத்தில் எஞ்சியிருந்த பணத்தை மட்டும் எழுதி எடுத்துக் கொண்டார்.
13
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வழியாக அன்றைய தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார் என்கிறது வாய்மொழிக்கதை.
9
ஆரல்வாய்மொழியில் வண்டியை நிறுத்தி திருவிதாங்கூரிலிருந்து தான் பெற்றுக் கொண்ட தன் கார் உட்பட அனைத்து வசதிகளையும் அங்கே விட்டு விட்டு வேறு காரில் ஏறி சென்னைக்கு போனார் என்பார்கள் ஆனால் அப்போதும் அவருக்குத் தெரியும் உலகத்திலேயே மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றைப்பற்றி.
29
எப்போது வேண்டுமானாலும் அவரால் அதைத் திறந்து எடுத்துக் கொள்ளவும் முடியும்.
8
ஒரு கைப்பிடி வைரத்தை அள்ளிக் கொண்டு போனால் போதும் அவர் ஒரு கோடீஸ்வரர்.
10
அவர் செய்யவில்லை.
2
எளிமையான பிராமணராகத் திரும்பிச்சென்று தன் ஆசிரியப்பணிக்கு மீண்டார்.
6
அரசனும் அந்தணனும் அப்படி இருந்திருக்கிறார்கள் இது என்ன அறம்?
7
இந்த நூற்றாண்டில் ஏன் இது நமக்கு சாத்தியமில்லாமல் போகிறது?
7
எதுக்குடா இதைத் திறந்தோம் என்று மனமுடைந்து வழக்கு போட்ட சுந்தர ராஜன் இறந்து போனார்.
11
ஏனெனில் அவருக்குத் தெரியாது இவ்வளவு பெரிய செல்வம் இருக்கும் என்று.
8
இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் கையில் அதைத் திறந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.
8
நீங்கள் பார்க்கலாம் நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் ஒர் அறிக்கை வரும்.
8
அவை எல்லாமே கண்ணாடிக்கற்கள்தான் எதுவுமே வைரம் கிடையாது என.
7
அங்கு பொன்னே இல்லை என்று.
4
எங்கே போனதென்றே தெரியாது.
3
ஏற்கனவே அப்படி எவ்வளவோ செல்வங்கள் நம் நவீன ஜனநாயகத்தில் காணாமல் போயிருக்கின்றன.
9
இதைவிடப்பலமடங்கு கோயில் நிலங்கள் பொதுச்சொத்துக்கள்.
4
இந்தக்காலகட்டத்தில் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இருந்த ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது.
9
அது நம் கைகளில் தட்டுப்படுகிறது.
4
அதைக் குடிஅறம் அல்லது குலஅறம் என்று சொல்லலாம்.
6
பழங்காலத்தில் நம் குடிபாரம்பரியமாக குலபாரம்பரியமாக சில அறங்கள் கைமாறி வந்து கொண்டே இருந்தன.
10
அதை மீறவே மாட்டார்கள் நம் முன்னோர்.
5
அது தான் அறத்தின் ஒரு தொடக்கம்.
5
மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் உணவு தேடி எப்படி வேண்டுமானாலும் உறவை அடைந்து சக மனிதனை வென்று வாழலாம் என்ற ஒருகாலம் இருந்திருக்கும்.
16
அதிலிருந்து ஒருவிதமான நெறிக்குள் கொண்டு வந்தார்கள்.பழங்குடிகள் சில விஷயங்களை உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள் .
12