text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
சிலபழங்குடிகள் பால் குடிப்பதில்லை.
3
செத்தாலும் சரி.
2
எனலாம்.
1
அல்லது எனலாம்.
2
ஆனால் அந்த நெறிகளின் அடிப்படையில்தான் அவர்களின் குடி கட்டியமைக்கப்பட்டுள்ளது.
7
அதைமீறினால் அவர்களின் குடி அழியும்.
4
ஆகவே மீறமாட்டார்கள்.
2
அது குடியறம்.
2
ஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம் ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார்.
14
பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார்.
7
பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது.
4
அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.
4
நம் தாத்தாக்கள் பாட்டிகள் எல்லாருமே குடி அறத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள்.
8
அதற்கு மேல் உள்ள அறங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தனவா என்பது வேறு விஷயம்.
9
நம் பழைய நூல்களை பார்க்கும்போது நம் நாட்டார்க்கதைகளில் அந்த குடியறத்தைத்தான் நாம் பார்க்கிறோம்.
10
நமக்கு அது ஒரு பிரமிப்பையும் மனவிலகலையும் இன்று உருவாக்குகிறது.
7
ஒர் அறத்தின் பொருட்டு ஒரு குலமே விலக்கப்பட்ட கதைகளைக் கேட்டு என்ன காலம் அது என்று பிரமிப்போம்.
13
ஒர் அறத்தின் பொருட்டு ஒருவன் சாகிறான் என்பது நமக்கு இன்று ஒரு திகைப்பையே உருவாக்கும்.
11
தமிழகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒருவகை நடுகற்சிலைகள் உண்டு.
7
தன் தலைமுடியை தன் கையால் பிடித்து தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ளும் சிலை.
11
அதை நவகண்டம் என்று தமிழ்நாட்டிலே சொல்வார்கள் ஒரு மேலான தர்மத்துக்காக தன் கழுத்தை தானே அறுத்து செத்தவனுக்கு வைக்கப்பட்ட சிலை அது.
16
போருக்கு முந்தைய களப்பலியாக.
3
ஓர் ஏரியோ ஆலயமோ இடரின்றி கட்டப்படவேண்டும் என்பதற்கான தன்பலியாக அவன் இறக்கிறான்.
9
என்ன காரணத்துக்காக என்றாலும் இப்படி ஒரு மனிதன் செய்ய முடியுமா என்பதே நமக்கு நம்பமுடியாததாக இருக்கிறது.
12
ஆனால் அவன் நம்பிய ஒரு விஷயத்துக்காக இதை செய்திருக்கிறான்.
7
இங்கே தான் சமூகஅறம் ஆரம்பிக்கிறது.
4
ஒரு குடியிலிருந்து ஒரு சமூகத்திற்காக அவன் தன்னை அளிக்கிறான்.
7
தான் அழிந்தாலும் தன் சமூகம் வெல்லவேண்டுமென விழைகிறான்.
6
அந்த அறத்தின் முகங்களை பழைய இலக்கியங்களில் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
8
குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தின் சமூக அறத்தின் பல முகங்களை நாம் பார்க்க முடியும்.
15
மகாபாரதத்தில் ஓர் இடம்.
3
வெண்முரசில் அதை எழுதி வந்தபோது பெரிய விவாதம் வந்தது.
7
குந்திக்கு குழந்தைகள் இல்லாத போது நியோகம் என்ற முறைப்படி வேறு ஆண்களுடன் கூடி குழந்தை பெறலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது.
15
தன் கணவன் மேல் உள்ள பிரியத்தினால் முடியாதென்று சொல்கிறாள்.
7
அப்போது பாண்டு பல்வேறு நியோகமுறைகளைப்பற்றிச் சொல்கிறான்.
5
எப்படியெப்படியெல்லாம் குழந்தை பெறலாம் என்று விளக்கும் ஒரு பகுதி அது.
8
அந்த விளக்கத்தில் பலவகையான மைந்தர்களைப்பற்றி விளக்கம் வருகிறது.
6
கானீனன் என்று ஆரம்பித்து பதினெட்டு வகையான பிள்ளைகள்.
6
எல்லாவகையான பிள்ளைப்பிறப்பும் அந்த பட்டியலில் அடங்கிவிடுகிறது.
5
அதாவது ஒரு பெண்ணுக்கு பிள்ளை என்று ஒன்று பிறந்தால் அது எப்படி பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் போட்டு அந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
19
அந்த சமுதாயத்தில் என்று ஒருவன் கிடையாது.
5
புறக்கணிக்கப்பட்டவன் அன்னியன் என்று ஒருவன் கிடையாது அவன் இன்னவகையான மைந்தன் அவ்வளவுதான்.
9
சரி ஒரு கேள்வி.
3
ஒரு மனைவி கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
5
அவள் இன்னொரு காதலனிடம் ரகசியமாகப் போய் ஒரு குழந்தை பெற்றால் அது அவனுக்குத் தெரியும் என்றால் அந்தக் குழந்தை அந்தக் கணவனுக்கு பித்ரு கடன்கள் செய்யமுடியுமா?
19
செய்ய முடியும்.
2
அவன் அவளை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்யும் வரை அவள் பெறும் எல்லாக் குழந்தைகளும் அவன் குழந்தைகள்தான் .அந்தக் குழந்தை நீர்க்கடன் செலுத்துமென்றால் அவன் மோட்சத்துக்கு போக முடியும்.
21
சரி அவள் விவாகரத்து செய்து இன்னொருவன் கூட போய்விட்டாள்.
7
பிறகு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையிடம் அவள் இவர் உன் அப்பா தான் என்று சொன்னால் அந்தக் குழந்தை அவர் மைந்தன் ஆகுமா?
18
ஆகும்.
1
அவன் அந்த தந்தைக்கு நீர்க்கடன் செய்யலாம்.
5
அம்மா ஒருவரை இவர் உன் தகப்பன் என்று சொன்னால் அவன் அம்மைந்தனுக்குத் தகப்பன் தான்.
11
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவனும் அவள் கணவனின் சட்டபூர்வமான மகனே.
7
ஏன் ஒருவனை ஒரு தந்தை மானசீகமாக தன் மைந்தன் என்று சொன்னால்போதும் அவன் மைந்தனேதான்.
11
ஆக அந்தச் சமூகம் ஒரே ஒரு மனிதனைக்கூட அடையாளம் இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது சமூகத்தை விட்டு வெளியே அனுப்பக்கூடாது என்பதில் வைத்திருந்த ஒரு பிடிவாதம் அதில் தெரிகிறது.
19
அது ஒரு குலஅறம்.
3
மெய்சிலிர்க்க வைக்ககும் பல இடங்கள் இருக்கின்றன மகாபாரதத்தில்.
6
யக்ஷப்பிரசன்னம் ஒர் இடம்.
3
பாண்டவர்கள் காட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
4
கடுமையான் தாகம்.
2
ஒரு இடத்தில் பாஞ்சாலி விழுந்து விடுகிறாள்.
5
தண்ணீர் கொண்டு வா இனி ஒரு அடி கூட காலெடுத்து வைக்க முடியாது என்று சொல்கிறாள்.
12
பீமன் தண்ணீர் கொண்டுவர தனியாக போகிறான்.
5
அங்கே ஒரு அழகான குளிர்ச் சுனையை பார்க்கிறான்.
6
குடிப்பதற்காக கையில் நீரள்ளுகிறான்.
3
ஒர் அசரீரி கேட்கிறது.
3
ஒரு யக்ஷன் சொல்கிறான் இது என் குளம் நான் சொல்லாமல் இந்த தண்ணீர் நீ குடிக்க கூடாது சரி என்ன செய்யவேண்டும்?
16
என்று பீமன் கேட்கிறான்.
3
யக்ஷன் நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்.
6
சரியான பதில் சொன்னால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.
9
பீமன் இல்லை என் தாகம் அதுவரை பொறுக்காது என்று சொல்லி தண்ணீர் குடிக்கிறான்.
10
இறந்துவிடுகிறான்.
1
சற்று நேரம் கழித்து அங்கு அர்ஜுனன் வருகிறான்.
6
அண்ணன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான்.
4
இருந்தும் நீரள்ளி குடிக்க்க முயல்கிறான்.
4
அசரீரி தடுக்கிறது.
2
கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி கேட்கிறது.
4
இல்லை முதலில் தாகம் தீரட்டும் என்றபடி நீர் குடித்து அவனும் இறந்து விடுகிறான்.
10
அது போல நகுலனும் சகதேவனும் இறந்து விழுகிறார்கள்.
6
கடைசியாக தம்பியரைத் தேடி தர்மன் அங்கு வருகிறான்.
6
தண்ணீர் அள்ளப்போகும்போது மறுபடியும் அசரீரி குரல் கேட்கிறது.
6
தண்ணீரை கீழே விட்டுவிடுகிறான்.
3
அந்த அசரீரி நூறு கேள்விகளைக் கேட்கிறது.
5
யக்ஷப் பிரஸ்னம் என்ற அற்புதமான ஒரு குட்டி உபநிஷத் அது.
8
அதில் அற்புதமான யோசித்துப்பார்க்கவேண்டிய வினாக்கள் இருக்கின்றன.
5
உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய சுமை எது என்று கேட்கும்போது கர்ப்பம் என்று சொல்கிறான்.
10
உலகத்தில் மிகப்பெரிய துயரம் எது என்று கேட்கும்போது புத்திர துக்கம் என்று சொல்கிறான்.
10
தந்தைக்கு மகன் இறக்கும்போது வரும் துயரம் அது.
6
தாய்க்கு மகன் இழக்கையில் வருவதை விட ஒருபடி பெரியது அது.
8
ஏனெனில் தாயைவிடவும் தந்தைக்கு மகன் முக்கியமானவன்.
5
ஏனெனில் அவன் நீட்சி மைந்தன்.
4
அவன் இந்த உலகத்தில் எஞ்சியிருக்கப்போவது மகன் வடிவில் தான்.
7
அதுதான் துயரங்களில் உச்சகட்ட துயரம் என்று யக்ஷபிரஸ்னம் சொல்கிறது.
7
எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்த உடனே யக்ஷன் மனம் மகிழ்ந்து கேட்கிறான்.
9
இவ்வளவு அற்புதமான பதிலை நீ சொல்வாயென்று நான் நினைக்கவில்லை.
7
இங்கு படுத்திருப்பவர்களில் ஒருவனை உயிருடன் தருகிறேன்.
5
கூட்டிக் கொண்டு போ.
3
என்கிறான்.
1
அப்போது தருமன் நகுலனை உயிர்ப்பித்துத் தரும்படி கேட்கிறான்.
6
யக்ஷனுக்கு ஆச்சரியம்.
2