text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
அர்ஜுனன் இல்லையென்றால் நாட்டை திரும்ப பெறமுடியாது.
| 5 |
பீமன் இல்லையென்றால் இந்தக் காட்டைவிட்டே வெளியே போக முடியாது நகுலனை ஏன் கேட்கிறாயே?
| 10 |
என்று கேட்கிறான்.
| 2 |
தர்மன் சொல்கிறான் என் தந்தைக்கு இரண்டு மனைவியர்.
| 6 |
குந்தியின் மகனாக நான் இங்கு இருக்கிறேன்.
| 5 |
மாத்ரியின் மகன்கள் நகுலனும் சகதேவனும்.
| 4 |
அதில் ஒருவன் இருக்க வேண்டும் அதுதான் நியாயம்.யக்ஷன் வெளியில் வந்து என்றைக்கு தர்மதேவனை நான் கண்ணில் பார்க்கிறேனோ அன்று எனக்கு மீட்பு என்று சொன்னார்கள்.
| 18 |
இன்று எனக்கு மீட்பு என்று சொல்லி பாண்டவர்களை உயிர்ப்பித்துவிட்டு விண்ணுலகு செல்கிறான்.
| 9 |
யோசித்துப்பார்க்கும்போது அந்த மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
| 7 |
ஒரு குலத்திற்குள் செயல்படும் உச்சகட்ட அறம் ஒன்று இருக்கிறது.
| 7 |
குலதர்மங்களின் அறம் அது.
| 3 |
ஒரு காலகட்டத்தில் அதுவே முதன்மையாக இருந்தது.
| 5 |
என் குடும்பத்தில் ஒரு நிகழ்வு.
| 4 |
என் அப்பா தற்கொலை செய்து இறந்து போனார்.
| 6 |
அவர் மனம் கலங்கி இருந்த ஒரு காலம்.
| 6 |
அம்மாவின் தற்கொலை காரணமாக நான் விரக்தி அடைந்து வீட்டை விட்டு சென்றுவிட்ட ஒரு காலம்.
| 11 |
எஞ்சியிருக்கும் சொத்தை முழுக்க அப்பா என் தங்கை பெயருக்கு எழுதி வைத்தார்.
| 9 |
கேரளக்குல வழக்கப்படி சொத்து பெரும்பாலும் பெண்களுக்குத்தான் போகும்.
| 6 |
திருமணத்தின்போது அவளுக்கு கொடுத்த சொத்து போக எஞ்சியிருந்தது அந்த வீடும் நிலமும் மட்டும்தான்.
| 10 |
அதையும் தங்கை பெயரில் எழுதி வைத்துவிட்டார்.
| 5 |
அவர் இறந்து போனபின் உயில் வாசிக்கும்போது தான் இது தெரியவந்தது.
| 8 |
அப்போதும் தங்கைக்கு அது தெரியவில்லை.
| 4 |
அவள் மாமியாருக்கு தான் அது தெரிகிறது.
| 5 |
மாமியார் உற்சாகமாக போய் தங்கையிடம் உனக்குதான்டீ வீடு நிலம் எல்லாம் கிடைச்சிருக்கு என்று சொன்னாள்.
| 11 |
பெரிய வீடு அது.
| 3 |
தங்கை சீறி எழுந்தாள்.
| 3 |
எப்படி அப்பா அப்படி எழுதி வைக்கலாம் ?
| 6 |
அது எங்கள் அண்ணன்களின் சொத்து என்றாள்.
| 5 |
காலை பத்து மணிக்கு அவளுக்குத் தெரிகிறது செய்தி.
| 6 |
பத்தரைக்கு பஸ் பிடித்து திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஊருக்கு வந்து மறு நாளைக்கே அதை திருப்பி எங்கள் பெயரில் எழுதி வைத்தாள்.
| 16 |
மாமியார் எதுக்கு சொத்தையெல்லாம் திருப்பி எழுதி வைக்கிறே?
| 6 |
என்று கேட்டதற்கு சங்கைக் கடிச்சு துப்பிருவேன்.
| 5 |
என் அண்ணன்களின் சொத்து அது.
| 4 |
போ அந்தப்பக்கம் என்று தங்கை அவரிடம் சொன்னதாக மாமியார் பிற்பாடு என்னிடம் சொன்னார்.
| 10 |
காளி மாதிரி நிற்கிறாள் என்று மாமியார் சொன்னார்.
| 6 |
இது ஒரு குல அறம்.
| 4 |
ஒரு சராசரி மலையாளிப்பெண்ணின் அறம் அது.
| 5 |
இதுதான் நம் குடும்பங்களை இதுவரைக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது நான் பட்டப்படிப்பு கடைசி வருஷம் படிக்கும் காலம்.
| 12 |
அப்போது கல்லூரிக்கு அடிக்கடி போகும் வழக்கம் கிடையாது.
| 6 |
அப்பாவைக் கூட்டிட்டு வரலேன்னா உள்ளே விடமாட்டேன் என்றார் முதல்வர் ஆர்தர் டேவிஸ்.
| 9 |
அப்பாவிடம் போய் அதை சொல்ல முடியாது.
| 5 |
ஆகவே நான் சுற்றிச்சுற்றி அம்மாவிடம் சொன்னேன்.
| 5 |
ஒருவழியாக அம்மாவுக்கு புரிந்தது.
| 3 |
சரி வரேன் என்று சொன்னார்கள்.
| 4 |
என் அம்மா உலக இலக்கியத்தில் ஆழமான பரிச்சயம் கொண்டவர்கள்.
| 7 |
சமகால ஆங்கில இலக்கியப்படைப்புகள் அனைத்தையும் படித்தவர்கள்.ஆனால் ரொம்ப சின்ன கிராமத்தில் மாடு மேய்த்து புல்பறித்து வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு.
| 14 |
வெளியே போன அனுபவமே கிடையாது.
| 4 |
நான்தான் முதலில் வெளியே போவதற்காக செருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.
| 9 |
அவர்கள் மலையாளி முறைப்படி வெள்ளை ஆடை அணிந்து என்னுடன் வந்தார்.
| 8 |
தக்கலை என்பதே அவர்களுக்கு ஒரு பெரிய ஊர்.
| 6 |
தக்கலை பஸ் ஸ்டாண்டுக்குள் எங்க அம்மாவை கொண்டு வந்து நிறுத்தினேன்.
| 8 |
நான் அருகே நின்றேன் அங்கே ஒரு சின்ன சுவர்.
| 7 |
அதற்கு அந்தப்பக்கத்தில் ஒரு சிறிய சாலை.
| 5 |
அங்கிருந்து ஒரு பத்து வயசு பெண் ஓடிவந்தாள்.
| 6 |
அவள் பின்னால் ஒருவன் ஓடிவந்தான்.
| 4 |
வந்து அந்த பொண்ணை முடியைப் பிடித்து படபடவென்று அடிக்க ஆரம்பித்தான்.
| 8 |
நல்ல மூர்க்கமாக அடித்தான்.
| 3 |
மொத்த பஸ்ஸ்டாண்டும் பார்த்துக்கொண்டே இருந்தது.
| 4 |
டேய் எதற்கடா அடிக்கிறான்?
| 3 |
என்று பதறியபடி கேட்டார்கள்.
| 3 |
அவள் ஏதாவது பண்ணியிருப்பாள் என்று நான் சொன்னேன்.
| 6 |
அவன் அடித்துக்கொண்டே இருந்தான்.சட்டென்று அம்மா ஓடிப்போய் அம்மா போன அந்த வேகத்தை இன்றைக்கு யோசித்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கும் அவனை ஒரு அறை விட்டார்கள்.
| 18 |
அடியை வாங்கிக்கொண்டு இவதான் இவதான் என்று ஏதோ சொன்னான்.
| 7 |
உக்கிரமாக அம்மா போடா என்றார்கள்.
| 4 |
அபப்டியே அவன் திரும்பிப் போய்விட்டான்.
| 4 |
அம்மா அந்தப்பெண்ணை அணைத்துக் கொண்டார்கள்.
| 4 |
மொத்த நிகழ்ச்சியையும் நான் அப்பால் நின்றுதான் பார்த்தேன்.
| 6 |
எனக்கு கைகால் எல்லாம் நடுங்கிவிட்டது.
| 4 |
அவன் திருப்பி அடித்துவிட்டால்?
| 3 |
நான் அப்படியே கூட்டத்துக்குள் பதுங்கி பின்னால் வந்துவிட்டேன்.
| 6 |
அடிவாங்கியவன் கையால் காதைப் பொத்தியபடி திரும்பி போய்விட்டான்.
| 6 |
பெரிய உடல்கொண்ட ஆள்.
| 3 |
அதன் பிறகுதான் நான் பக்கத்தில் போனேன்.
| 5 |
அம்மா அவளை சமாதானப்படுத்தி திருப்பி கொண்டு போய் விட்டார்கள்.
| 7 |
அவன் மகள் தான்.
| 3 |
டேய் கையை வெச்சா கொன்னுபோடுவேன் என்று அம்மா சொன்னார்கள்.
| 7 |
இல்ல அம்மணி என்று ஏதோ சமாதானம் சொன்னான்.
| 6 |
பின்பு சுந்தரராமசாமியிடம் இந்த சம்பவத்தைச் சொன்னபோது எப்படி அம்மாவுக்கு அடிக்க தோன்றியது?
| 9 |
எப்படி அவன் அடிவாங்கிக் கொண்டு போனான்?
| 5 |
என்றேன் ராமசாமி சொன்னார் சரி ஒருவேளை அவன் திருப்பி உங்கள் அம்மாவை அடித்திருந்தால் என்ன ஆகும்?
| 12 |
அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வெளியே போகவே முடியாதே?
| 7 |
ஆம் அந்தப் பெண்ணை அவன் அடிக்கலாம் .அது அவன் பெண் .ஆனால் ஒரு அம்மாவை அடிப்பதை பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
| 16 |
நம் சமூகத்தின் கூட்டுமனம் கொதித்து எழும்.
| 5 |
நம் குடியறத்தில் அதற்கு இடமே இல்லை.
| 5 |
அந்த குடியறமே இன்றைக்கும் நம் காவல்.
| 5 |
நாம் அதை நம்பித்தான் நம் பெண்களை தனியாக பஸ்ஸில் அனுப்புகிறோம்.
| 8 |
நான்கு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோமே.
| 5 |
நான்குபேர் அருகே நின்றால் ஏதோ ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா?
| 7 |
பத்து பேர் சேர்ந்தால் நியாயம் பிறக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?
| 9 |
அதுதான் எப்போதும் இருந்து வரும் குல அறம் என்பது.
| 7 |
அதன் மேலேதான் மேலதிகமான அறங்கள் அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன.
| 7 |
சி.பி.ராமசாமி ஐயர் காரில் நாகர்கோவில் வழியாக தக்கலைக்கு செல்வதை பார்த்த ஒரு நண்பர் எனக்கு இருந்தார்.
| 12 |
அய்யப்பண்ணன் என்று பெயர் நூற்றுப்பத்து வயது வரை வாழ்ந்தார்.
| 7 |
நான் வேலை பார்த்த அலுவலகத்து நேர் முன்னால் இருந்த ஒரு கூரை டீக்கடைக்கு வருவார்.
| 11 |
நான் அதிக நேரம் அங்கேதான் இருப்பேன்.
| 5 |
அவரைப்பற்றி ஒரு மூன்று கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.
| 6 |
அசாதாரணமான மனிதர் அவர்.
| 3 |
பழைய கால மனிதர்.
| 3 |
அவர் கடைசி வரைக்கும் ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.
| 8 |
எஞ்சிய வாழ்நாளிலும் திருவிதாங்கூர் மன்னரின் பிரஜையாகவே வாழ்ந்து இறந்து போனார்.
| 8 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.