text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர் என்று விளக்கம் சொன்னான்.
10
கொஞ்ச நேரத்தில் கிளம்பினோம்.
3
அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான்.
8
ஏன்?
1
என்று கேட்டேன்.
2
இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது.
8
இறந்துவிடுவாள்.
1
உள்ளே போட்டால் குளிராக இருக்கும்.
4
அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும் என்று சொன்னான்.
8
நான் சொன்னேன் நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே?
5
இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன?
4
அவன் சொன்னான்.
2
அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை.
6
வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது.
8
அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள் இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும்.
11
அவர்களால் முடியாது.
2
அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.
5
நெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம்.
7
மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
8
இதுதான் அறம் என்பதின் அடிப்படை.
4
இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது.
10
அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.
19
மிக சாதாரணமாக பொருள் அளிக்கும் ஒரு குறள் அது.
7
ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல.
5
பெருவெளி.
1
ஸ்பேஸ்.
1
அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல்.
3
உணவின் முதல் வடிவம் உருவாகிறது.
4
புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம்.
5
அன்னத்தின் கண்கண்ட வடிவம்.
3
ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது.
6
ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான்.
5
இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல்.
6
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும்.
7
புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது.
5
ஒன்று புல்லை சாப்பிடுவோம்.
3
அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம்.
4
அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும்.
6
அய்யப்பண்னன் சொன்னது அதுதானே?
3
அறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம்.
11
சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது.
15
இல்லறம் துறவறம் என அறங்கள் இரண்டு.
5
அதன் பிறகு பௌத்தம் வந்தது சமணம் வந்தது.
6
அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள்.
6
இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள்.
7
அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை.
6
அது பிரபஞ்ச நெறி.
3
அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக வரும் அறம் ஒன்று உண்டு என்று இளங்கோவடிகள் சொல்கிறார்.
10
அந்த அறம் எளிய குடியறம் அல்ல.
5
அது கற்பறமோ துறவறமோ போரறமோ அல்ல.
5
அது பெரிய எழுத்து அறம்.
4
எந்த மனிதரும் இங்கில்லாவிட்டால்கூட அது இங்கிருக்கும்.
5
அனைத்தும் மாறும்போதும் மாறாத நெறியாக நடுவே திகழும் அதைத்தான் பௌத்தம் தர்மம் என்ற சொல்லில் சொல்கிறது.
12
பாலி மொழியில் தம்மம்.
3
அதை எப்படி விளக்கலாம் என்றால் ஒரு தீ தீயாக இருப்பதை தீத் தன்மை என்று சொல்லலாம்.
12
அது அதன் தர்மம்.
3
தண்ணீர் தண்ணீர்த் தன்மையோடு இருப்பது தண்ணீரின் தர்மம்.
6
இப்படி கோடானுகோடி தர்மங்கள் இந்த பூமியில் இருக்கின்றன.
6
ஒரு புழுவுக்கும் புழுவுக்குமான தர்மம் இருக்கிறது.
5
இந்த அத்தனை அறமும் தனித்தனியாக தெரிவது நாம் அவற்றை பிரித்துப் பார்ப்பதனால்தான்.
9
நாம் இல்லையென்றால் இவையெல்லாம் சேர்த்து ஒரு ஒற்றை அறம் தான்.
8
அதுவே மகாதம்மம்.
2
பேரறம் அந்த அறத்தைதான் வள்ளுவர் சொல்கிறார்.
5
அந்த அறத்தைதான் இளங்கோ சொல்கிறார்.
4
அந்த அறத்தைதான் இன்னும் பிரம்மாண்டமான வடிவமாக கம்பன் சொல்கிறான்.
7
அறத்தின் மூர்த்தியான் என்று ராமனை ச் சொல்கிறான்.
6
அறம் ஒரு மனிதனாக வருமென்றால் அது இவன் என்று சொல்கிறான்.
8
அறம் பின் இரங்கி ஏக என்கிறான்.
5
அவன் நடந்து போனால் அழுதபடி அறம் பின் செல்கிறது.
7
அப்படிப்பட்ட அறத்தை தொடர்ந்து வலியுறுத்தி பெரிதாக்கி நமக்கு அளித்திருக்கிறார்கள்.. குல அறத்திலிருந்து சமூக அறத்திலிருந்து ஒரு பேரறம் நோக்கிப் போகும் பெரும் பயணம் ஒன்று நம் பண்பாட்டில் நமக்குக் காணக்கிடைக்கிறது.
22
அறம் என்பது ஏற்கப்படுவது.
3
ஆனால் என்றுமே அதன் துலாமுள் நிலையற்றுமிருக்கிறது.
5
ஏனென்றால் வாழ்க்கை பெரும் பெருக்கு.
4
அந்த அறச்சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் எப்போதும் கையாள்கின்றன.. நான் விரும்பி சொல்லும் ஜெயகாந்தன் கதை ஒன்று உண்டு.
13
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ என்ற கதை.
6
அதில் கணவர் கிட்டத்தட்ட தியாகராஜ சுவாமிகள் போன்ற ஒருவர்.
7
உஞ்சவிருத்தி செய்து வாழ்பவர்.
3
மறுவேளைக்கு உணவை வைத்துக்கொள்ளாதவர்.
3
இசையையும் பக்தியையும் தன்வாழ்க்கையாகக் கொண்டவர்.
4
அவருக்கு ஒரு மனைவி.
3
அவள் கணவனது நலம் மட்டுமே நாடும் கணவனுக்கென்றே வாழும் அந்தக்காலத்துப் பதிவிரதை.
9
ஆனால் அவளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
6
இவர் இறந்துபோனால் யாரும் என்னை பார்க்க மாட்டார்கள்.
6
இவர் இருக்கிற வரை நான் இவரை நம்பி இருந்துவிடுவேன்.
7
நாளைக்கு இவர் இறந்து போனால் இப்பேர்ப்பட்ட மகானுடைய மனைவி போய் கையேந்தினால் பிச்சை எடுத்தாள் என்று ஆகிவிடக்கூடாது.
13
இதுவும் இவரே நாளைக்கு படுத்துட்டார் என்றால் இவருக்கு ஒரு மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட இவர்கள் யாரும் வரமாட்டார்கள்.. அப்போது அவருக்காக நான் கையேந்தினால் அது இன்னும் அவமானம்.
20
அப்போது என்ன செய்வது.
3
அவள் ஒரு லாட்டரி சீட்டு எடுக்கிறாள்.
5
அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுகிறது.
6
லாட்டரிச்சீட்டை எடுத்துக் கொண்டு போய் கணவனிடம் கேட்கிறாள்.
6
இதை நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?.
5
அவர் சொல்கிறார்.
2
நீதானே ஆசைப்பட்டு வாங்கினே?
3
நேக்கு ஒண்ணும் வேண்டாம்.
3
நீயே வெச்சுக்கோ அவள் திகைத்துவிடுகிறாள்.
4
உங்களுக்கு இல்லாத ஒண்ணை நான் வெச்சுக்க முடியாது.
6
நான் வாங்கினதே உங்களுக்கும் சேர்த்துதான்.
4
நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வெச்சுக்க மாட்டேன்.
6
அவர் இயல்பாக சரி அப்ப கிழிச்சு எறிஞ்சுடு என்கிறார்.
7
அவள் பதைப்புடன் அது எப்படி கிழிச்சு எறியறது?
6