text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.
| 4 |
கொள்கைக்காக வாழ்கிறவனை கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும்.
| 6 |
யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும்.
| 6 |
யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
| 5 |
இந்தநிலை மாறும்போது அருவறுப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
| 5 |
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் தி.மு.க.
| 6 |
இருந்து விட்டுப்போனவர்.
| 2 |
அவருடைய கட்டபொம்மன் நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்.
| 11 |
சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை.
| 7 |
அதுதான் நல்ல பண்பு.
| 3 |
காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை.
| 3 |
நான் அவரைவிட்டு வந்தவன் எம்.ஜி.ஆர்.
| 4 |
ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர் நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது.
| 13 |
காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்?
| 4 |
வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்?
| 4 |
காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார்.
| 4 |
யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது.
| 9 |
தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார்.
| 9 |
காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்?
| 4 |
நான் ஒரு கலைஞன் தி.மு.க.
| 4 |
பொதுக்குழு உறுப்பினர்.
| 2 |
அண்ணா வழியில் நடப்பவன்.
| 3 |
அவர் கொள்கை எனது உயிர்.
| 4 |
அப்படிப்பட்ட நான் காமராஜரையும் அய்யாவையும் பெரியார் பாராட்டாமல் வேறுயாரைப் பாராட்ட முடியும்?
| 9 |
இதே மேடையில் தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன்.
| 6 |
நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன்.
| 5 |
நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர்.
| 9 |
அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன்.
| 5 |
காமராஜர் இரவுபகல் பாராமல் பாடுபடுகிறார்.
| 4 |
அவரை ஏன் பாராட்டக் கூடாது?
| 4 |
என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது?
| 8 |
எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
| 7 |
ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித்தந்தவர் காமராஜர்.
| 7 |
ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார்.
| 6 |
நாம் அதைத்தான் சொல்கிறேன்.
| 3 |
என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது.
| 4 |
அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.
| 3 |
பண்புள்ளவன் பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான்.
| 7 |
காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன்.
| 5 |
காமராஜர் வருவார் என்று சால்வை வாங்கி வைந்திருந்தார் ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர் அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது.
| 19 |
அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி.
| 5 |
நான் நாடோடி மன்னன் படத்தில் சொன்ன கருத்துக்கள் போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார்.
| 12 |
எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன்.
| 4 |
அது நடந்து வருகிறது.
| 3 |
உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.
| 17 |
இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள்.
| 6 |
நான் இதை ஏற்க விரும்பவில்லை.
| 4 |
ஏனென்றால் சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை.
| 8 |
ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது.
| 5 |
ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
| 7 |
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன்.
| 6 |
சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது.
| 6 |
உண்மையில் அது மறையவில்லை.
| 3 |
இருந்த இடத்தில்தான் இருக்கிறது.
| 3 |
அதுபோல காமராஜரின் புகழ் தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது.
| 7 |
நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை.
| 5 |
அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
| 3 |
ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
| 12 |
காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும்.
| 9 |
மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும்.
| 5 |
கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
| 8 |
அதோடு நாம் சிந்திக்கவேண்டும்.
| 3 |
அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும்.
| 5 |
மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.
| 5 |
ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார்.
| 5 |
இது சரியா?
| 2 |
என்று சிலர் கேட்கிறார்கள்.
| 3 |
சர்வாதிகார ஆட்சி வேறு பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம் பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை.
| 17 |
ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார்.
| 9 |
அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது.
| 3 |
காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது.
| 5 |
காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார்.
| 5 |
எப்படி மாறியது?
| 2 |
ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது.
| 7 |
அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.
| 4 |
இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்.
| 9 |
தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார்.
| 5 |
அதற்குக் காலதாமதம் ஆகலாம்.
| 3 |
காமராஜர் என் தலைவர்.
| 3 |
அண்ணா என் வழிகாட்டி.
| 3 |
என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன்.
| 5 |
ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன்.
| 12 |
அப்போது அவரது நல்ல குணத்தைக் கண்டேன்.
| 5 |
எண்ணி எண்ணிப் பூரித்தேன்.
| 3 |
என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ அவமானப்படுத்தவோ இல்லை.
| 6 |
மாநகராட்சித் தேர்தலின்போது அவர் வேட்டைக்காரன் வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார்.
| 10 |
நாம் பதிலுக்கு ஏதேதோ பேசினேன்.
| 4 |
அது அரசியல் தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர் பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர்.
| 11 |
தொண்டராய் தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.
| 10 |
சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும்.
| 7 |
எம்.ஜி.ஆர்.
| 1 |
சிகப்பு நான் கறுப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார்.
| 10 |
மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை.
| 5 |
ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான்.
| 5 |
கறுப்பு என்றால் களங்கம் அல்ல.
| 4 |
இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும் எம்.ஜி.ஆர் இப்படிப்பேசிய அடுத்த சில நாட்களில் அரசியல் சூழல்பரபரப்பானது.
| 12 |
திமுகவின் பரமஎதிரியான காங்கிரஸ் தலைவரை புகழ்ந்துபேசியதோடு அவரை எப்படி தலைவர் என்று சொல்லலாம்.
| 10 |
அண்ணாவை வழிகாட்டி என சிறுமைப்படுத்திவிட்டார் என திமுகவில் ஒரு குழு பிரச்னை கிளப்பியது.
| 10 |
அண்ணாவிடமும் இதைச் சொல்லி அவர் மனதை மாற்ற முயன்றனர்.
| 7 |
எம்.ஜி.ஆரால் கட்சி அடைந்த பயனை அவர்களிடம் எடுத்துக்கூறிய அண்ணா அதை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்.
| 11 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.