text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
தன் முந்தைய தற்போதைய செயல்பாடுகளை புன்னகையுடன் பகிர்கிறார்... நான் பிறந்தது கேரளா.
9
பள்ளிப் படிப்பை ஊட்டி கொடைக்கானல்ல முடிச்சேன்.
5
அந்தப் பருவத்துல எதிர்காலக் கனவுகள்னு எதுவும் இல்லை.
6
ஸ்கூல் லைஃப் முடிஞ்சு சென்னையில பி.எஸ்சி.
5
மேத்ஸ் படிச்சுட்டு இருந்த சமயத்துலதான் ஐபிஎஸ் ஆகும் ஆசை வந்தது.
8
அப்போ நான் நிறைய க்ரைம் புக்ஸ் நாவல்ஸ் படிப்பேன்.
7
அதனால காவல்துறை மேல எனக்கு நிறைய நன்மதிப்பு ஏற்பட்டுடுச்சு.
7
அதுதான் நான் ஐபிஎஸ் ஆனதுக்கான அச்சாரம்.
5
அதுமட்டுமில்லாம அப்போ காவல்துறையில பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவா இருந்ததும் இத்துறையை ஒரு சவாலா நான் தேர்வுசெய்ய மற்றொரு காரணமா இருந்துச்சு.
16
எங்க வீட்டுல நீ நல்லா படிச்சு எந்தத் துறைக்கு வேணாலும் போ.
9
ஆனா எந்தச் சூழல்லயும் இன்னொருத்தரை சார்ந்து வாழக்கூடாதுன்னு சொன்னாங்க.
7
படிக்கிறது மட்டும்தான் பிரதானமா இருந்துச்சு.
4
அதனால சரியா திட்டமிட்டு படிச்சு எக்ஸாம் எழுதினேன்.
6
நான் ஆசைப்பட்ட ஐபிஎஸ் பணியே எனக்கு ஒதுக்கப்பட்டுச்சு.
6
சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகள் முடிஞ்சு திருச்சியில ட்ரெயினிங் காலத்தை முடிச்சு சேலத்துல ஏஎஸ்பியா நியமிக்கப்பட்டேன்.
12
அப்போ சில பெண்களைத் தவிர்த்து கூட வேலை செய்றது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருந்தாங்க.
10
ஆண் பெண் பாகுபாடு இல்லாம எல்லா துறையிலயும் வேலையிலயும் பெண்கள் சாதிக்கணும்னு சின்ன வயசுல இருந்து என் பெற்றோர் சொன்னதுதான் எனக்கு அப்போ அடிக்கடி ஞாபகம் வரும்.
20
அதுபடியே நான் என்னோட வேலையை சரியா செஞ்சுட்டு இருந்தேன்.
7
அப்போ எனக்கு தமிழ்ல பேசத் தெரியாது.
5
கொஞ்சம் கொஞ்சமா தமிழ்ல பேசவும் எழுதவும் கத்துக்கிட்டேன்.
6
போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு வந்த பிறகு சமூகத்துல இருக்கிற பிரச்னைகளைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
11
சக அதிகாரிகள் ஒத்துழைப்போட பணி செஞ்சேன் என்பவர் தன் பணி அனுபவத்தில் எதிர்கொண்ட வழக்குகளைப் பற்றிச் சொல்கிறார்.
13
சட்ட ஒழுங்கு பிரச்னை போராட்டம் கடத்தல் சம்பவங்கள் கொலை கொள்ளை கள்ளச்சாராயம் பிரச்னைன்னு பல சவாலான வழக்குகள்ல விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கேன்.
19
குறிப்பா நான் சேலத்துல வொர்க் பண்ணின ஆரம்ப காலகட்டத்துல நான் விசாரிச்ச ஒரு வழக்கு என்னால மறக்க முடியாதது.
14
இறந்த நிலையில கிடந்த மூணு மாசக் குழந்தையோட உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினேன்.
11
மரவள்ளிக் கிழங்கு கொடுத்ததால அடைப்பு ஏற்பட்டு அக்குழந்தை இறந்துடுச்சுன்னு டாக்டர் அறிக்கை வந்துச்சு.
10
பல நாள் விசாரணைக்குப் பிறகா அக்குழந்தைக்கு வேண்டப்பட்ட ஒரு ஸ்கூல் படிக்குறப் பையன்தான் விளையாட்டா கிழங்கு ஊட்டி அதனால குழந்தை இறந்துருச்சுன்னு தெரியவந்துச்சு.
17
இப்படி விசித்திரமான சவாலான த்ரில்லிங்கான மிரட்டல் விடப்பட்ட பல வழக்கு விசாரணையை நான் எதிர்கொண்டிருக்கேன் என்பவர் தமிழகத்தின் முதல் பெண் சட்ட ஒழுங்கு டிஜிபியானது பற்றிப் பேசுகிறார்.
20
சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் மத்திய சிபிஐயில நாலறை வருஷம் நேஷனல் டிஃபென்ஸ் காலேஜ்ல ஒரு வருஷம் தவிர பெரும்பாலான என் பணி தமிழ்நாட்டுல வெவ்வேறு துறையிகளில்தான் இருந்துச்சு.
20
அப்படி நான் நினைச்சிருந்தா என்னால பல பிரச்னைகளை தைரியமா எதிர்கொண்டிருக்கவே முடிந்திருக்காது.
9
மேலும் என்னைப் பொருத்தவரை என்னை அணுகுற சீனியர் ஜூனியர்னு யாரா இருந்தாலும் அவங்களோட கருத்தை முழுசா கேட்ட பிறகுதான் நான் பேசவே ஆரம்பிப்பேன்.
17
அப்படி என்னோட பணிகாலம் முழுக்க சுமூகமாதான் இருந்துச்சு.
6
அதுக்கு எல்லா காவல்துறை அதிகாரிகளுமே ஒத்துழைப்புக் கொடுத்ததுதான் காரணம்.
7
போலீஸ்னா ரொம்பவே ஃபிட்டா உயரமா இருப்பாங்களே.... ஆனா நீங்கன்னு எங்கிட்ட கேட்டதுண்டு.
9
என்னைப் பொறுத்தவரைக்கும் யூனிஃபார்ம் போட்டதும் ஸ்மார்ட்டா இருக்குறதும் அதை மனசளவுல நினைக்குறதும்தான் போலீஸ்க்கு அழகு.
11
அப்படி என்னைப் பொறுத்தவரை நான் மனசளவுல ஃபிட்டான ஸ்மார்ட்டான போலீஸா இருந்தேன்.
9
அதனால என்னோட உடல் மொழியை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன் என புன்னகைக்கும் லத்திகா சரண் ஓய்வுக்குப் பிந்தைய தற்போதைய செயல்பாடுகளைக் கூறுகிறார்.
17
ஓய்வு பெற்ற பிறகு சென்னையிலதான் இருக்கேன்.
5
நிறைய நிறுவனங்கள் கல்லூரிகளுக்கெல்லாம் சிறப்பு விருந்தினரா உரையாற்றப் போயிட்டு இருக்கேன்.
8
தவிர குடும்ப உறுப்பினர்களைப் போல இருக்கிற என்னோட எட்டு செல்ல நாய்களை பராமரிக்கிறது இப்போதைய என்னுடைய அளவற்ற சந்தோஷத்தைக் கொடுக்குற பணியா இருக்கு.
17
குறிப்பா என்னோட எட்டு நாய்கள்தான் எனக்கு கமாண்டோஸ் மாதிரி இருக்குன்னு எனக்குள்ள அப்பப்போ நினைச்சு சிரிப்பேன்.
12
தவிர புத்தகங்கள் படிக்கிறதும் இப்போ என்னோட ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாக்குது.
8
அப்படி போன வருஷம் மத்திய பிரதேசத்துல சந்திச்ச நாங்க இந்த வருஷம் மைசூர்ல சந்திக்க இருக்கிறோம்.
12
காலங்கள் கடந்தும் எங்களோட நட்பு தொடர்றதுல்ல ரொம்பவே சந்தோஷம் எனக்கு.
8
அதுல நான் பெருமையா சொல்ற மாதிரி என்னோட பேட்ச்மெட்டான ஜாய் குமார் சிங் என்பவர் இப்போ மணிப்பூர் மாநில துணை முதல்வரா இருக்கார்.
17
காவல்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பெண்கள் நிறைய சாதிக்க விரும்புகிறேன் புன்னகைக்கிறார் லத்திகா சரண்.
11
மாணவர்கள் நீதி நேர்மை தவறாதவர்களாக இருக்க வேண்டும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அறிவுரை ட்ரோன் போட்டியில் கின்னஸ் சாதனை முயற்சி அசத்திய நடிகர் அஜித் பயிற்சியளிக்கும் எம்.ஐ.டி மாணவர்கள் குழு
23
தெலுங்கில் நாலொ ஒக்கடு என்ற பெயரில் வெளியாக உள்ள எனக்குள் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆல்பம்
14
இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கே.டி.யு.
11
மசோதாவை எதிர்க்குமாறு இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்துகிறது.
14
இந்த சட்டமானது உயர்கல்வியை தனியார்மயமாக்குவதையும் நாட்டின் இராணுவமயமாக்கலை அதிகரிப்பதையும் நோக்கிய மேலும் ஒரு நகர்வாகும்.
11
வளாகங்கள் கல்லூரிகள் திணைக்களங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சிறப்பு நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் பிரிவுகளை பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் படி நிறுவுதல்.
16
கட்டணங்கள் ஏழை மாணவர்களுக்கு நெருங்க முடியாததாக இருக்கும்.
6
நிர்வாக சபையானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கி இருக்கும்.
10
இதற்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளில் இருந்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு துணை வேந்தர் தலைமை வகிப்பார்.
12
பல்கலைக்கழகத்தின் மீது இராணுவ ஒழுக்கம் விதிக்கப்படும்.
5
இராணுவ இணைய தளத்தின் படி கீழ் சூரியவெவவில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் இராணுவ ஊழியர்களின் மேற்பார்வை காரணமாக கண்டிப்பான ஒழுக்கம் பராமரிக்கப்படுகிறது.
16
மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சீருடை உள்ளதுடன் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனைக்கு உள்ளாக்கப்படுவர்.
10
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சர் பல்கலைக்கழகத்தில் நிலவும் எந்தவொரு சூழ்நிலையும் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருப்பது போல் அல்லது தேசிய கொள்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது கேடு விளைவிக்கக் கூடியது என்று கருதினால் அல்லது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று கருதினால் அவர் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர்கள் குழுவுக்கு கட்டளையிட முடியும்.
43
இந்த மசோதாவானது கல்வி தனியார்மயமாக்கத்தை ஆழப்படுத்துதல் மற்றும் சமுதாயத்தை இராணுவமயமாக்குதலதும் பாகமாகும்.
9
பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற பெயரில் இத்தகைய இராணுவம் நடத்தும் பல்கலைக்கங்கள் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
20
பாக்கிஸ்தான் இராணுவமானது அந்த நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதுடன் பொருளாதாரத்தின் மிகுதியான பகுதியை அது கட்டுப்படுத்துகிறது.
18
இந்த வாய்ச்சவடால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஒடுக்குமுறை ஆட்சி மீதான சமூக எதிர்ப்பை திசை திருப்புவதன் பேரில் சிறிசேனவை சூழ ஒழுங்கமைக்கப்பட்ட வலதுசாரி நல்ல ஆட்சி இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகை போலி வாக்குறுதிகளில் ஒரு பகுதியாகும்.
28
பல்கலைக்கழக மாணவர்கள் உயர் கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து தங்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தும் நடத்துவதுடன் வெளிநாட்டுடன் இணைந்த கட்டணம் செலுத்தும் தனியார் மருத்துவ கல்லூரியான தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிலையத்தை அகற்ற வேண்டும் என்று கோருகின்றனர்.
26
மருத்துவ மாணவர்கள் இந்த பிரச்சாரத்தில் இணைந்து ஒன்பது மாத காலமாக விரிவுரையை பகிஷ்கரித்து வருகின்றனர்.
11
இருப்பினும் போலிஇடது முன்நிலை சோசலிசக் கட்சியின் மு.சோ.க.
6
கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அ.ப.மா.ஒ.
7
சைட்டத்தை ஒழிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்திற்கு மாணவர் இயக்கத்தை மட்டுப்படுத்தியுள்ளது.
9
அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதை தீவிரமாக்குவதன் பெயரில் அவர்கள் தொழிற்சங்கங்களுடனும் வலதுசாரி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் கைகோர்த்துள்ளனர்.
12
மாணவர் போராட்டங்களுக்கு எதிராக கொடூரமான பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மாணவர் தலைவர்களை கைது செய்வதே சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதிலாக இருக்கின்றது.
18
ஒரு சூழ்ச்சியாக அரசாங்கம் சைட்டத்தை இரத்து செய்து அதன் மாணவர்களுக்கு ஒரு தனி தீர்வை வழங்கும் என்றும் அறிவித்தது.
14
அரசாங்கத்தின் முடிவை ஒரு வெற்றியாக வரவேற்ற அ.ப.மா.ஒ.
6
மாணவர் போராட்டங்களை மூடித்துக்கொண்டது.
3
பின்னர் அரசாங்கம் கட்டணம் செலுத்தும் மருத்துவ படிப்புக்காக கே.டி.யு.வில் சைட்டம் மாணவர்களை சேர்ப்பதற்கு முடிவு செய்தது.
12
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவ பட்டங்களை தனியார்மயமாக்குவது சம்பந்தமாக மருத்துவர்கள் மத்தியில் நிலவும் கவலைகளை திசைதிருப்பும் நோக்கில் பல வேலைநிறுத்தங்களை நடத்தியது.
17
ஆனால் பின்னர் சைட்டம் மாணவர்களை கே.டி.யு.வில் சேர்ப்பதற்கு அது பரிந்துரைத்ததுடன் தனது முன்மொழிவை அமுல்படுத்தியதற்காக அரசாங்கத்தை பாராட்டியது.
13
அரசாங்கம் மற்றொரு பெயரில் சைட்டத்த்தை முன்னெடுக்க தயார் செய்து வருவதனாலும் இலங்கை மருத்துவ சபையை கே.டி.யு.வால் அலட்சியம் செய்ய முடியும் என்பதாலும் இப்போது ஜி.எம்.ஓ.ஏ.
18
இந்த மசோதாவை எதிர்ப்பதாக கூறுகிறது.
4
அ.ப.மா.ஒ.
1
அழைப்பாளரான லஹிரு வீரசேகர உட்பட அதன் தலைவர்கள் தற்போது கல்வியை தனியார்மயமாக்குவதாகவும் இராணுவமயமாக்குவதாகவும் அரசாங்கத்தை விமர்சித்து வருவதுடன் பாரிய எதிர்ப்புக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
17
அ.ப.மா.ஒ.
1
மற்றும் ஜி.எம்.ஓ.ஏ.
2
மசோதாவை கைவிடுவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பயனற்ற பிரச்சாரங்களை ஊக்குவித்து வருகின்றன.
9
இது அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மீதான மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் டாக்டர்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் மற்றொரு பொறியாகும்.
14
இதன் அர்த்தம் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட மானியங்கள் மற்றும் சமூக திட்டங்களை வெட்டித் தள்ளுதல் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் வரிகளை அதிகரித்தலுமே ஆகும்.
20
நெருக்கடி நிறைந்த உலக முதலாளித்துவத்தின் சுமைகளை சுமத்தும்போது ஒவ்வொரு நாட்டிலும் பொதுக் கல்வி மைய இலக்காகிவிட்டது.
12
அமெரிக்காவில் இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரியும் பாடசாலை நிதிகளை மீண்டும் ஸ்தாபிக்கக் கோரியும் பல மாநிலங்களில் மாணவர்களின ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18
பிரித்தானியாவில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8
இந்தியாவில் பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பல்கலைக்கழகங்களை கட்டணம் பெறும் நிறுவனங்களாக மாற்றுவதன் பேரில் அவற்றுக்கு தன்னாட்சி உரிமை என்றழைக்கப்படுவதை வழங்குவதற்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
20
முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தினாலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளை எந்தளவு அழுத்தம் கொடுத்தாலும் அது கைவிடப் போவதில்லை.
15
அரசாங்க தாக்குதல்களை தோற்கடிக்க அரசியல் போராட்டம் தேவை என்பதை விளக்கி மாணவர் மற்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.
13
தலையீடு செய்தது.
2
நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிட்டால் மட்டுமே அனைவருக்கும் ஒழுக்கமான தரம் வாய்ந்த முன்னேற்றமான கல்வியை வழங்க முடியும்.
12
வங்கிகள் பெரிய நிறுவனங்கள் பிரமாண்டமான பெருந்தோட்டங்கள் ஆகியவற்றின் செல்வத்தை கைப்பற்றுவதன் மூலமும் மற்றும் வெளிநாட்டு கடன்களை நிராகரிப்பதன் மூலமும் மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்கு தேவையான பாரிய நிதிகளை பெற்றுகொள்ள முடியும்.
22
இத்தகைய திட்டங்களை ஏழை ஒடுக்கப்பட்ட மக்களையும் இளைஞர்களையும் சூழ அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தால் ஸ்தாபிக்கப்படும் தொழிலாளர்களதும் விவசாயிகளின் அரசாங்கத்தால் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.
17
அ.ப.மா.ஓ.
1
மு.சோ.க.
1
மற்றும் ஏனைய போலிஇடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ அமைப்புடன் பிணைந்துள்ளதுடன் அதனுள்ளேயே தீர்வுகளை தேடுவதனால் அத்தகைய போராட்டத்தை தடுக்க முயல்கின்றன.
16
முதலாளித்துவத்தின் இந்த கைக்கூலிகளை மாணவர்கள் நிராகரிக்க வேண்டும்.
6
சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை வழிநடத்தக் கூடிய புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ.
12