text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
படித்துக்கொண்டிருக்கும் நமக்கு விறுவிறுப்பு ஏறுகிறது போலீஸ் ஜீப்பில் பார்த்த அந்த மச்சக்காரன் கல்பனாவின் கணவனா என்று அறியுமுன்னரே தாய்மை அடைந்திருப்பதை போனில் பேசும்போது நந்தினியிடம் கல்பனா சொல்ல இந்த சூழ்நிலையில் என்ன கேட்பது?
24
நமக்கும் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம்போல இருக்கிறது இருவருக்கிடையே நடைபெறும் உரையாடல் மூலமாகவே நந்தினி ஒரு வக்கீல் என்பதையும் அவளது வருங்காலக் கணவரும் ஒரு வக்கீலே என்பதனை நமக்குத் தெரியத்தந்து அப்பாடா என்று சற்றே ஆசுவாசப்படவைக்கிறார் கதாசிரியர் நந்தினி மூலமே தீர்வு வரப்போகிறது என்பதையும் அப்பொழுதே லேசான குறிப்பால் உணரவைத்துவிடுகிறார் கூடவே பாலும் பழமும் கொடுத்து பராமரிக்க ஆட்களையும் வைத்து செய்யும் வேலைக்கும் செல்லாது தங்கக் கூண்டிலே அடைத்த கிளியெனவே இந்தக்காலத்தில் ஒரு செல்போன் கூட வைத்திருக்கமுடியாததாக கல்பனாவின் நிலை இருப்பதையும் சற்றே துயர்ப்பட விளக்கிவிடுகிறார் அதுக்குள்ளாரயே கதைல எத்தனை டுவிஸ்ட்?
63
எவ்வளவு வேகமான காட்சி மாற்றங்கள்?
4
கல்பனா நந்தினி இருவருக்குமே இரவுத்தூக்கம் கெட்டுவிடுகிறது உயிர்த்தோழிகள் என்பதனை இதன்மூலமாகவும் சிம்பாலிக்காக சொல்லிவிடுகிறார் ஒரே பிரேம்ல ரெண்டுபேரும் வேறு வேறு இடத்துல தூக்கம் வாராது துயருரும் காட்சி நம் கண்முன்னே விரிகிறது அதுபோல சிவராமன் பெண்களின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதனை தெளிவாக உணர்ந்துவிட்டான் என்பதை அவன் தன் மனைவியைக்கொண்டே வளர்த்துவரும் கூண்டுக்கிளிகளை விடுதலை செய்ய வைப்பதன்மூலமாக சிம்பாலிக்காக உணர்த்துவதும் உன்னதம் பெண்களின் சுதந்திரம் என்பது என்ன உண்மை நட்பு என்பது என்ன என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைந்த கதை இன்னும் ஒரு மிக முக்கியமான செய்தி நம் தேசிய மொழியாம் ஹிந்தியை அனைவரும் கற்க வேண்டியதின் அவசியத்தை அறிவுறுத்துவது ஹிந்தி தெரியாமல் எவ்வளவு பெரிய வம்பிலும் தொல்லையிலும் கதாநாயகன் மாட்டிக்கொள்கிறான்?
79
ஒரு கதையில் எத்தனை எத்தனை மெசேஜ்கள்?
5
ஆரம்பத்தில் மச்சத்தை வைத்து ஒரு முறையே பார்த்த தோழியின் கணவனை அடையாளம் கண்டுகொள்வது தாய்மை அடைந்த உயிர்த் தோழியிடம் அவளது கணவனின் நிலைகுறித்து சொல்லமுடியாதபோதும் பதறாமல் நிதானமாக வருங்காலக் கணவனுடன் சேர்ந்து ஜெயில் வாசத்திலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து போலீஸில் காணாமல்போன பொருட்களுக்காக கம்ப்ளெய்ன்ட் கொடுக்கவும் உதவி செய்து உயிர்த்தோழியின் கணவன் மனம்கோணாதபடி கல்பனாவின் அருமை பெருமைகளை உணரச்செய்து ஊர் திரும்பும்வரை உதவி செய்து அப்பா சொல்லவே மூச்சு வாங்குதே கதையிலேயே நிமிர்ந்து நிற்கும் நிறைவான சுறுசுறுப்பான துறுதுறுப்பான பாத்திரம் நந்தினியின் பாத்திரம்தான் நந்தினி என்றால் காமதேனுவின் மகளல்லவா செயலோடு சேர்ந்து பெயரும்கூட கனப்பொருத்தம்தான் நந்தினியின் வருங்காலக் கணவர் வஸந்த்தின் கணேஷின் ஜூனியரா?
73
பாத்திரப் படைப்பும் அவளைப்போலவே உதவும் குணம் உள்ள வக்கீல் என பொருத்தமான ஜோடிதான் என்று நம்மை எண்ணமிட வைக்கிறது நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணமாக பன்முகத் திறமைகள் கொண்ட நந்தினிக்கே ரோல் மாடலாக இருந்த அலட்டல் இல்லாத கல்பனாவின் பாத்திரம் குறிஞ்சி மலரைத் தேடிக் காண விரும்பும் கடைசியில் தன்னுடன் வாழும் மனைவியே ஒரு உன்னதக் குறிஞ்சி மலர்தான் என்று பட்டு உணரும் பாத்திரமாக சிவராமன்.
47
எல்லாவற்றுக்கும் மேலாக ஓப்பனிங் ஷாட்டில் வந்து விறுப்பேற்றி குளோசிங் ஷாட்டில் சிவராமனை மலரே குறிஞ்சி மலரே என கட்டிய மனைவியிடம் மனதுக்குள் டூயட் பாடவைக்கும் அவனது அதிர்ஷ்ட மச்சம் ஒரு உயிருள்ள பாத்திரமாகவே மாறிவிடுகிறது ஓடியாடி வேலைக்கு சென்று சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பன்முகத்திறமைகொண்டிருந்த ஒரு பெண்ணை வசதிகள் எல்லாம் செய்துகொடுத்து அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாய் எண்ணிக்கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் ஏறக்குறைய தங்கச்சிறையிலேயே கல்பனாவை அடைத்துவிட்ட கணவனாய் சிவராமன் சிறைப்படுத்துவதின் வலி சிறை பட்டபின்னர்தான் புரிகிறது ஓவர் பொஸசிவ்னெஸ்தான் பாசத்தின் வெளிப்பாடு என்று எண்ணியிருந்த சிவராமனுக்கு உண்மைப் பாசம் உண்மைக் காதல் என்றால் முழு சுதந்திரம் தருவதுதான் என்ற ஆணித்தரமான கருத்தினை இதைவிட எப்படி புரியவைக்க முடியும் நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர் அட்டகாசம் சிறுகதை எழுத்தாளர்களின் உலகத்தில் இது போன்ற எளிய நடையிலான உயர்ந்த கருத்துக்களை ஆணித்தரமாக உணர்த்தும் உன்னத பாத்திரப் படைப்புகளுடன் கூடிய காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் விஜிகே அவர்களின் இந்த சிறுகதையும் உண்மையில் ஓர் உன்னதக் குறிஞ்சி மலர்தான் நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர் நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர் ஆயிரம் ஆயிரம் உள் அர்த்தங்களைச் சொல்லும் இந்த வரிகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது தங்களின் அதிபுத்திசாலித்தனத்தினை நன்கு எனக்கு எடுத்துக்காட்டுகிறது.
151
சில சமயங்களின் நம் விரலாலேயே நம் கண்களைக் குத்திக்கொள்வதும் நேர்வது உண்டு என்பது ஏனோ இங்கு என் நினைவுக்கு வந்தது.
15
திரு.
1
ரவிஜி அவர்கள்.
2
சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றதற்கு இனிய பாராட்டுக்கள்.
6
வாழ்த்துகள்.
1
தங்கச்சிறையிலேயே கல்பனாவை அடைத்துவிட்ட கணவனாய் சிவராமன் சிறைப்படுத்துவதின் வலி சிறை பட்டபின்னர்தான் புரிகிறது ஓவர் பொஸசிவ்னெஸ்தான் பாசத்தின் வெளிப்பாடு என்று எண்ணியிருந்த சிவராமனுக்கு உண்மைப் பாசம் உண்மைக் காதல் என்றால் முழு சுதந்திரம் தருவதுதான் என்ற ஆணித்தரமான கருத்தினை இதைவிட எப்படி புரியவைக்க முடியும் நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர் வழக்கமான தன் நகைச்சுவையான பாணியில் அழகானதொரு விமர்சனமெழுதி பரிசுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
55
அமெரிக்காவில் அழகுத்தமிழ் எழுத்துக்களைப் பார்க்க கண்ணும் மனமும் நிறைகின்றன.
7
தமிழ் கற்றுத்தரும் தாத்தாவுக்கும் அழகாய் கற்றுக்கொள்ளும் பேரனுக்கும் இனிய வாழ்த்துகள்.
8
கீத மஞ்சரியின் குறிப்புக்கு நன்றி.
4
இப்பொழுது தான் பார்த்தேன்.
3
பேரனுக்கு பாட்டி கற்றுத் தந்த தமிழ்.
5
என் மனைவி பணி ஓய்வு பெற்ற ஆசிரியை.பி.லிட்.
6
எம்.எட்.
1
மூன்றாம் பரிசை வென்ற ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
6
விமரிசனத்தை இன்னும் படிக்கவில்லை.
3
இப்போதைக்கு வாழ்த்து மட்டும்.
3
தூங்கி எழுந்திருச்சி வந்து மறுபடியும் தூங்கிட்டேன்போல இருக்கு.
6
அவள் உயிரில் அவள் உடம்பில் அவள் உணவில் நாம் உண்டாகிறோம்.
8
பி... தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும் உற்சாகமான ஈடுபாடுகளினாலும் நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள் திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.
15
இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில் புதிதாக மேலும் சில விருதுகளை பரிசுகளை அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.
15
இந்தப்போட்டியின் ஆரம்ப காலக்கட்டங்களில் எட்டு முறைகள் மட்டும் கலந்துகொண்டு அதில் ஏழு முறைகள் பரிசுகள் வாங்கியுள்ளார்கள்.
12
மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள்.
4
இவர்கள் நம் போட்டிகள் சிலவற்றில் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார்கள்.
7
நடுவில் இவரால் தொடர்ச்சியாக நம் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டன.
11
இந்தப் போட்டி நடத்திய எனக்கு பக்கபலமாக இருந்து மிகவும் முக்கியமான பல உதவிகள் செய்துள்ளார்கள்.
11
பரிசு வென்றவர்களுக்கும் எனக்கும் இடையே மறைமுகமான ஓர் இணைப்புப்பாலமாக விளங்கி சுமுகமான உறவினை வலுப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு.
14
பரிசுக்கான தொகைகளை வெற்றியாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு உடனுக்குடன் மின்னல் வேகத்தில் அனுப்பி வைத்து இவர்கள் எனக்குக் காலத்தினால் செய்துள்ள பேருதவியை மனதாரப் பாராட்டி இந்த விருதினை இவருக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.
22
விருது பரிசுப் பணம் எல்லாம் உங்களுடையதாய் இருக்க என்னையும் சேர்த்துக் கொண்டு விருதுப்பெயரை பண்ணின அட??
12
இதுக்கெல்லாமா விருது??
2
ரொம்பவே ஆச்சரியப்படுத்தறீங்க வைகோ சார்.
4
என்னுடன் சேர்ந்து பரிசுகளைப் பகிரும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
7
பாராட்டுகள்.
1
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. விருது வழங்கிச் சிறப்பித்த தங்களுக்கும் போட்டி நடுவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும் விருதுகளுக்கு மேல் விருது.
18
எந்த வகையிலும் போட்டியில் பங்கேற்ற எவரும் மனந்தளர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதுடன் போட்டி முடிந்தபின்னரும் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து சிறப்பிக்கும் தங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன் கோபு சார்.
21
நடுவராகப் பொறுப்பாற்றிய ஜீவி சாரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரையும் தங்கள் பெயரோடு இணைத்து வழங்கப்பட்ட இவ்விருதினைப் பெற்றுள்ள ஐவருக்கும் என்னினிய வாழ்த்துகள்.
17
நாற்பது போட்டிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாது பங்கேற்று சாதித்த இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் கீதா மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
21
விமர்சனங்களை எப்படி எழுதுவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் வழிகாட்டியாய் அமைந்த விமர்சனங்கள் ரமணி சாருடையவையே.
12
நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்த ரமணி சாரும் தன்னால் விமர்சனங்களை எழுதி அனுப்பவியலா சூழலிலும் இப்போட்டிக்கான பரிசுப்பண பட்டுவாடா பொறுப்பை ஏற்று சிறப்புடன் செயல்பட்ட கலையரசி அக்கா அவர்களுக்கும் இவ்விருதினை அளித்து சிறப்பிப்பது சாலப்பொருத்தம்.
27
இருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
4
பழனி கந்தசாமி அய்யா அவர்கள் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
12
விமரிசனம் எழுதும் வித்தையை வித்யாசமாக எழுதுவதற்குக் கற்றுக் கொடுத்து விருது பெரும் திரு ரமணி அவர்களுக்கு இனிய பாராட்டுக்கள் காலத்தினால் செய்த திருமதி கலையரசியின் உதவி ஞாலத்திலும் பெரிதாயிற்றே?
21
விருதைப் பெற்ற தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வங்கிக் கணக்கில் காலம் தவறாமல் மிகச் சரியாக பரிசுப் பணம் கிடைத்ததற்கு காரணமான திருமதி கலையரசி அவர்களுக்கு என் நன்றி.
20
நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியைப் பெரிதாக எண்ணி சிறப்பு விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியிருக்கும் செயல் கோபு சாரின் பெருந்தன்மையையும் தயாள குணத்தையையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
20
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
4
வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் நாற்பது போட்டிகளிலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு போட்டிக்குச் சிறப்புச் சேர்த்த ராஜேஸ்வரி மேடம்பழனி கந்தசாமி அய்யா கீதா சாம்பசிவம் ஆகியோர்க்கு என் பாராட்டுக்கள் போட்டி துவங்கிய நேரத்தில் விமர்சனம் எழுதும் முறையை மற்றவர்களுக்குக் கற்றுகொடுக்கும் ஆசானாய் விளங்கிய திரு ரமணி சாருக்கு விருது கொடுத்துக் கெளரவப்படுத்தியிருக்கும் செயல் பாராட்டத்தக்கது.
39
இந்த சிறுகதைக்கு திருமதி.
3
ஞா.
1
கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த பரிசுக்குத் தேர்வான விமர்சனம் இன்று அவர்களால் அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
18
தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா.
7
கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
9
ஜீவீ வீஜீ விருது பெற்ற சாதனையாளர்களில் ஒருவரான நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு.
11
ரமணி சார் அவர்கள் தான் பெற்ற இந்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு அதனை இன்று அவர்களின் வலைத்தளத்தினில் பெருமையுடன் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
20
இதனை இன்று தனிப்பதிவாக அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள பெருந்தன்மைக்கும் மிகச்சிறியதோர் விருதாகினும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு கெளரவித்த அவர்களின் அன்புள்ளத்திற்கும் திரு.
17
யாதோ ரமணி சார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
11
இனிமையான பரிசளிப்பு விழாவை அழகாய் நடத்திக்கொன்டிருக்கும் தங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் இனிய பாராட்டுக்கள் ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது.
16
நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான்.
8
திரும்பத் திரும்ப நினைவூட்டுவார்.
3
எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன்.
11
என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள் பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார்.
11
இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம்.
17
எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
12
பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது.
7
மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன்.
4
இது ஒரு சாதனை என்றால் அதைச் செய்ய வைத்தது வைகோ அவர்களே.
9
திரு ரமணி சார் அவர்கள் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே.
11
ஆனாலும் அவருக்கும் ஒரு சிறப்பு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
7
திருமதி கலையரசி அவர்களின் சிறப்பான தொண்டிற்குக் கிடைத்த பரிசிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
9
ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது.
6
நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான்.
8
திரும்பத் திரும்ப நினைவூட்டுவார்.
3
எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன்.
11
என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள் பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார்.
11
இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம்.
17
எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
12
பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது.
7
மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன்.
4
ரமணி சாரைப் பற்றிய கருத்து எழுதும்போது கணினி தகராறு போச்சா என்னனு தெரியலை.
10
திரு பழனிசாமி ஐயா அவர்கள் கொஞ்சம் கூடச் சலிக்காமல் தொடர்ந்து எழுதியது அவரின் விடாமுயற்சிக்கு ஒரு சான்று.
13
விருதுக்குப் பெயர் வைக்கக் காரணமாய் அமைந்த நடுவருக்கும் போட்டியை நடத்திய வைகோ சாருக்கும் நன்றி.
11
இன்னிக்குத் தான் உங்க பதிவுகளை நிதானமாய்ப் படிக்கணும்.
6
சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனேன்.
5
இனி ஒவ்வொன்றாய்ப் படிக்க வேண்டும்.
4
வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
16
அடுத்தடுத்த இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும் அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால் அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது ஆகவே உள்ளது.
30
இது உங்கள் வீட்டு விழா என்பதையும் நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ.
12
நமக்குள் எல்லாம் எதற்கு?
3
தினமும் வருகை தந்து மனம் திறந்துபேசி கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
13
வெற்றி விழா தொடர்ந்து சிறப்பாக நடப்பது பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிரது.
9
பரிசுகள்பெற்ற பங்கு கொண்ட யாவரையும் பாராட்டுகிறேன்.
5
என்ன அழகாக கட்டுக் கோப்பாகத்தளர்வே இல்லாத ஒரு முயற்சியை இவ்வளவு மேன்மையாகத் திறம்படச் செய்து உற்சாகத்தை வாரி வழங்கிய உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
18
உங்கள் பெயரிலும் ஜீவி சார் பெயரிலும் விருது அருமை.
7
போனில் இருந்து சில நேரம் டைப் செய்வதால் நிறைய எழுத முடியவில்லை.
9