text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
என்ன எழுதலாம் என்பதை விட எதிலிருந்து எழுதலாம் என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது.
10
இதோ கல்யாணம் முடிந்து இரண்டு நாள் ஆகிவிட்டது.
6
இன்னும் அந்த பிரம்மிப்பில் அப்படி கூட சொல்லக்கூடாது பெரும்மப்பில் இருந்து விடுபட்டாகிவிடவில்லை.
9
அத்தனை ஒரு அழகிய திருமணம்.
4
ஆயில்யன் தன் வலைப்பூவின் காப்ஷனில் போட்டது போல ஆயில்யன் கடகம் எல்லா இடத்திலும் நட்பாக.
11
மகா பெரிய உண்மை.
3
ஆமாம்.
1
இங்கே நாங்கள் பார்த்தது ஆரியம் திராவிடம் திமுக அதிமுக ரஜினி கமல் சிவாஜி எம் ஜி ஆர் விஜய் அஜீத் கிழக்கு மேற்கு என எல்லாத்தரப்பும் ஒரு வித சந்தோஷமுடன் தனது வீட்டு திருமணத்துக்கு வந்தமை போன்ற ஒரு உணர்வு.
29
ஒரு திருமணத்தை அழகாக எழுத வேண்டும் என ஆசை இருந்தும் எழுத இயலாமைக்கு காரணம் எனக்கு அத்தனை ஒரு கோர்வையாக வரவில்லை.
16
ஆன்லைனில் இருந்த துளசி டீச்சரிடம் கேட்டேன்.
5
எப்படி டீச்சர் எழுதுவது என்று.
4
நத்திங்.
1
பார்த்தது எல்லாம் விரலில் கொண்டு வா உண்மை தமிழன் போல... பக்கம் அதிகமானால் கவலையே இல்லை.
12
ஆமா படிப்பவன் பத்தி நாம ஏன் கவலைப்பட வேண்டும் என சொன்னாங்க.
9
அப்படி எழுதினா என்ன கிடைக்கும் டீச்சர் என கேட்டதுக்கு நீ நல்லா எழுதினா உனக்கு பத்துமனாபபுரம் கோவிலை எழுதி தருவேன்.
15
என்ன உனக்கு அதல்லாம் பத்துமா?
4
இன்னும் முக்கால் லெட்சம் கோடி கேட்பாய் என சொன்னாங்க.
7
ஒ .. ஆக இந்த பதிவை ஒரு நக்கல் பதிவாக எழுத சொல்றாங்க டீச்சர் என நினைத்துக்கொண்டேன்.
13
பொதுவா ஒரு நல்ல கச்சேரிகாரங்க கச்சேரிக்கு போகும் முன்னே எனக்கு தெரிஞ்சு எதும் கச்சேரி சம்மந்தமா பேசிப்பது இல்லை.
14
ஆனா சபை நல்ல சபைன்னு தெரிஞ்சா மனசுக்குள்ளே சபையை அசத்த வேண்டும் என்கிற டெலிபதி மாத்திரம் ஒருவருக்கு ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும்.
16
உதாரணத்துக்கு கத்ரி கோபால்நாத் எங்கயாவது கர்நாடகா கத்ரில இருந்து பிளைட் பிடிச்சு வருவாரு.
10
வயலின் கன்யாகுமரியம்மாள் நாகர்கோவில்ல இருந்து காரை பிடிச்சு வருவாங்க.
7
விக்கு வினாயக்ராம் ஜெர்மன் கச்சேரி முடிச்சுட்டு வருவாரு.
6
ஹரித்வாரமங்கலம் திருவையாறு போயிட்டு அவசரமா வருவாரு.
5
மோர்சிங் ராஜசேகர் பெங்களுருவில் இருந்து வருவாரு.
5
எல்லாரும் தங்கும் ஜாகையும் வேறு வேறு.
5
ஆனா மேடையில் வந்து உட்காந்ததும் சபையை பார்த்ததும் ஒரு புது ரத்தம் நாடி நரம்பில் ஓடி அடிச்சு தூள் கிளப்பிடுவாங்க.
15
கிட்ட தட்ட ஆயில்யன் கல்யாணம் கூட அப்படித்தான்.
6
எனக்கு மாயவரத்தானுக்கு கொக்கரக்கோ சௌமிக்கு ராம்கிக்கு தவிர அமரிக்காவிலே இருந்து சீமாச்சு அண்ணன் மயிலாடுதுறை சிவா எல்லே ராம் எல்லோருக்குமே அப்படித்தான்.
16
கோவை பதிவர் சந்திப்பு சென்னை வலைப்பதிவர் பட்டரை ஈரோடு சங்கமம் எல்லாம் போல நம்ம மாயவரம் சந்திப்பு ஆயில்யன் திருமணம்... வரும் விருந்தினரை நல்லா கவனிச்சு நம்ம ஊர் பெயரை தக்க வச்சுக்கனும் என்கிற அதீத ஆர்வம் எங்க மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருந்துச்சு.
31
அதை திறம்பட செய்யனும்.
3
மிக அழகாக செஞ்சாங்க நம்ம மாயவரம் பதிவர்கள் கொக்கரக்கோ சௌமியனும் மாயவரத்தானும்.
9
வரும் விருந்தினர்களை மாயவரத்தில் தங்க வைத்து உபசரித்து திருவாரூர் அழைத்து போய் திரும்பவும் மாயவரம் வந்து ரிசப்ஷனில் கலந்து கொண்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
19
கான்செப்ட் இதான்.
2
பின்னர் மாயவரத்தான் எல்லா காரும் பல்லாவரத்தில் இருந்து வரிசையாக கிளம்பலாமே என சொல்ல பின்னர் சஞ்சய் வேலன் அண்ணாச்சி ஆகியோர் கோவையில் இருந்தும் வெயிலான் ரமேஷ் முரளிகுமார் பத்மநாபன் ஆகியோர் திருப்பூரில் இருந்தும் அது போல பெங்களூரில் இருந்து சொக்கன் ஜீவ்ஸ் உட்பட பலரும் பின்னே மங்களூர் சிவாவும் வருவாங்க என கிட்ட தட்ட முடிவாகியது.
40
கிழக்கில் இருந்து பா.ரா பத்ரி முத்துகுமார் ஆகியோர் வருவாங்க மதுரையில் இருந்து சீனா சார் திருமதி சீனா கூட வருவாங்க எனவும் நினைத்தோம்.
17
நான் மேலே சொன்னதில் சிலர் மட்டும் சில அவசர வேலை காரணமாக வர முடியவில்லை.ஆனால் ஐகாரஷ் பிரகாஷ் உட்பட நாங்கள் எதிர்பாராத பலர் வந்து அசத்தி விட்டனர்.
20
பின்னர் ஆயில்யன் வீட்டுக்கு போனோம்.
4
ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போயிருந்ததால் ஆயில்யன் விட்டில் ஒரு காபி குடித்து விட்டு வந்தோம்.
11
ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன்.
18
அட அவளும் ஃபேசியல் அண்ணலும் ஃபேசியல் கம்பனின் சித்திரம் இதுக்குப் போயி கும்மி அடிப்பாங்களா?ன்னு கேட்டா.......அது மகா பாவம் கட்டாயம் ஃபேசியல் டெவில் ஷோ எங்களுக்கு வேணும் நல்ல ஹியூமரஸ் நடை உங்களூக்கு அபி அப்பா.. இந்த நேரத்தில் நட்டு அவன் அண்ணனுக்கு சொன்னது நியாபகம் வருது .
35
உனக்கு பாடம் கத்துக் கொடுக்கப்போகிறேன் ஆயில்யன் பேசியல் செஞ்சுக்க போனதை தனியாக பஸ் விட்டோ பதிவு போட்டோ கும்ம வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்து அடுத்த பாகத்துக்கு பயனிக்கிறேன்.
22
அருமையான கும்மிக்கு வாழ்த்துகள்.
3
ஆயில்யனுக்கும் அவர் மனைவிக்கும் இனிய மணவாழ்க்கைக்கு வாழ்த்துகள் ஆசிகள்.
7
என்னோட கமெண்ட் ஏன் பப்ளிஷ் ஆகலை??
5
அமைதியோடது மட்டும் வந்திருக்கு நான் காலையிலேயே கொடுத்திருந்தேனே
6
இளவரசர் அருள்மொழிவர்மரின் அந்த இளம் பொன் முகத்தில் என்ன மாய மந்திர சக்திதான் இருந்ததோ தெரியாது.
12
இத்தனைக்கும் இளவரசர் அச்சமயம் முகத்தைச் சுளுக்கிக் கொள்ளவும் இல்லை.
7
கோபத்தின் அறிகுறியும் சிறிது கூடக் காட்டவில்லை.
5
வெண்ணெய் திருடி அகப்பட்டுக் கொண்ட கண்ணனைப் போல் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பாவனை முகத்தில் தோன்றும்படி நின்றார்.
13
சின்னப் பழுவேட்டரையரிடம் குற்றம் கண்டுபிடித்துக் கடிந்து கொள்ளும் அறிகுறியோ அவரை எதிர்த்துப் போராடும் நோக்கமோ அணுவளவும் அவர் முகத்தில் காணப்படவில்லை.
15
ஆயினும் அஞ்சா நெஞ்சமும் அளவிலா மனோதிடமும் வாய்ந்தவரான காலாந்தக கண்டரின் கை கால்கள் அந்தக் கணத்தில் வெடவெடத்து விட்டன.
14
முகத்தில் வியர்வை அரும்பியது.
3
இன்னது செய்கிறோம் என்றுகூட அறியாமல் இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தியவாறு பொன்னியின் செல்வா ஈழங்கொண்ட வீரா சோழ நாட்டின் தவப்புதல்வா இது என்ன கோலம்?
19
இது என்ன காரியம்?
3
இவ்விதம் தண்டிப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் நான்?
6
சற்றுமுன் நான் செய்த பிழையைப் பொறுத்துக் கருணை புரிய வேண்டும்.
8
மன்னித்தேன் என்று அருள்வாக்குத் தரவேண்டும்.
4
கண்ணிருந்து பாராத குருடனாகி விட்டேன் என்று நாத் தழுதழுக்கக் குரல் நடுங்கக் கூறினார்.
10
மேலும் இதே முறையில் பேசப் போனவரை இளவரசர் தடுத்து தளபதி இது என்ன?
10
தாங்களாவது குற்றம் செய்யவாவது?
3
ஒன்றும் அறியாது இந்தச் சிறுவன் தங்களை மன்னிப்பதாவது?
6
என்றார்.
1
தங்களைப் பிடித்து நிறுத்திய இந்தக் கையை வெட்டினாலும் போதிய தண்டனை ஆகாது.
9
அடா என்று அழைத்த என் நாவை அறுத்துப் போட்டாலும் போதாது.
8
தங்கள் வார்த்தைகள் என் காதில் நாராசமாக விழுகின்றன.
6
போதும் நிறுத்துங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் கடமையைச் செய்தீர்கள்.
8
அதில் குற்றம் என்ன?
3
தவறு என்னுடையது.
2
நான் இந்த வேடத்தில் யானைப்பாகனாக வருவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லைதான்.
9
இப்படித் தாங்கள் செய்யலாமா?
3
எதற்காக?
1
சோழ நாட்டின் மகா வீரரை இப்படியா நான் வரவேற்றிருக்க வேண்டும்?
8
ஆசார உபசாரங்களுடன் முன் வாசலில் வந்து காத்திருந்து வெற்றி முரசுகள் எட்டுத் திக்கும் அதிரும்படி முழங்க வரவேற்றிருக்க மாட்டேனா?
14
தாங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று அறிந்துதான் நான் இந்த வேஷத்தில் வந்தேன்.
9
அதற்கெல்லாம் இது சரியான நேரமல்ல.
4
தங்களுக்குத் தெரியாதா?
2
சதிகாரர்களின் தீய முயற்சிகளைப் பற்றிச் சற்றுமுன் கொடும்பாளூர் இளவரசி கூறினாள் அல்லவா?
9
அது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகிறது கடவுளே என் தந்தை சக்கரவர்த்தியைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன்.
17
முதலில் என் தந்தையைப் பார்த்து விட்டு பிறகு ஐயா சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கக் கூடாதென்று நான் தடுத்து விடுவேன் என்று நினைத்தீர்களா?
16
அத்தகைய பாவி நான் என்று யாரேனும் தங்களுக்குச் சொல்லியிருந்தால்.
7
வேறு முறையில் நான் கோட்டைக்குள் வந்திருக்க முடியுமா யோசியுங்கள் கோட்டையைச் சுற்றி தென்திசைச் சேனைகள் வந்து சூழ்ந்திருக்கின்றன.
13
பெரிய வேளாரும் வந்திருக்கிறார் எதற்காக வந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கும்.
8
ரொம்ப நியாயம் பெரிய வேளாரின் புத்தி கெட்டுப் போயிருக்கிறது.
7
அவரால் நான் கோட்டைக்குள் வருவது தடைப்படும் என்றுதான் இந்த வேடத்தில் வந்தேன்.
9
அவர் மகளையும் அழைத்துக் கொண்டுவந்தேன்.
4
நல்ல வேளையாக அவர் என்னைக் கவனிக்கவில்லை.
5
தங்களுடைய கூர்மையான கண்கள் கண்டுபிடித்துவிட்டன என் கண்கள் மூடிப் போயிருந்தன.
8
அதனால்தான் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளவில்லை.
3
தங்களை யானைப்பாகன் என்று கூறிய வார்த்தைகளைத் தாங்கள் கருணை கூர்ந்து மன்னித்துவிடுங்கள் அவ்விதம் சொல்லவேண்டாம்.
11
தாங்கள் வேறு என் தந்தை வேறு என்றே நான் எண்ணவில்லை.
8
என்னைச் சிறைப்படுத்திக் கையோடு கொண்டு வருவதற்காகத் தாங்கள் ஆள்களை அனுப்பியிருந்தீர்கள் கடவுளே இது என்ன வார்த்தை?
12
நானா சிறைப்படுத்த ஆட்களை அனுப்பினேன்?
4
தங்களை உடனே பார்க்கவேண்டும் என்பதற்காகத் தங்கள் தந்தை சக்கரவர்த்தி அனுப்பினார் அது எனக்குத் தெரியாதா தளபதி இலங்கையில் நான் இருந்தபோது அவர்கள் வந்தார்கள்.
17
சக்கரவர்த்தியின் கட்டளை அல்ல பழுவேட்டரையர்களின் கட்டளை என்று என் அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள் நான் அவர்களுக்கு என் தந்தையின் கட்டளை எப்படியோ அப்படியே பழுவேட்டரையர்களின் கட்டளையும் என் சிரமேல் கொள்ளத்தக்கது என்று கூறினேன்.
24
கடலையும் புயலையும் மழையையும் வெள்ளத்தையும் தாண்டி வந்தேன்.
6
அரண்மனையின் முன் வாசலைத் தாண்டி உள்ளே போனதும் தங்கள் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினேன் தங்கள் கட்டளையின்றி தந்தையைப் பார்க்கவும் நான் விரும்பவில்லை இளவரசே இன்னும் என்னைச் சோதிக்கிறீர்களா?
22
தங்கள் தந்தையைத் தாங்கள் சந்திப்பதற்கு நான் என்ன கட்டளையிடுவது?
7
தங்களுடன் வரச் சொன்னால் வருகிறேன்.
4
இங்கேயே நிற்கச் சொன்னால் நின்று விடுகிறேன்?
5