text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
முதல்ல நீ டாக்டர்ட கூட்டிட்டு போ என்று கூறிவிட்டு சென்றார்.
8
மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தவன் அவளருகில் அமர்ந்து ஹே மது.... நீ அம்மாவ ஆகப்போற டி.
12
செம ஹாப்பி டி.
3
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.
8
கண்களை மெதுவாக திறந்தவள் மீண்டும் மயக்கமுற்றாள்.
5
அவளது நிலைமையை உணர்ந்தவன் வேகமாக அவளை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்ந்தான்.
9
அவளை உள்ளே டாக்டர் ஆராய இவன் பழைய நியாபங்களுக்கு சென்றான்.
8
தேவ் என்கிற ஆதிதேவ் ஊட்டியில் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவன்.
8
அவனது மனைவியாகிய மது என்கிற மதுபாலா கேத்தியில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்.
11
ஆதிதேவ்விற்கு தங்கை சாதனா என்றால் கொள்ளை பிரியம்.
6
சாதனாவும் மதுபாலாவும் சிறு வயதில் இருந்தே தோழிகள்.
6
பருவ வயது வருகிற வரை அவளை அந்நியராக நினைத்த அவன் மனது அதன்பின் அவள் மேல் மையல் கொண்டது.
14
வயது ஏற ஏற அவள் மேல் இருந்த ஈர்ப்பு காதலாக மாற காதலை வெளிப்படுத்த அவள் படிப்பு முடியும் வரை காத்திருக்க முடிவு செய்தான்.
18
யூஜி முடித்ததும் தேவ் தன் காதலை சொல்ல மதுபாலாவும் சம்மதித்தாள்.
8
அதன்பிறகு அவள் மேற் படிப்பு படிக்க செல்ல சாதனாவிற்கு கோவையில் சொந்த தொழில் செய்யும் மாதவனுடன் கல்யாணம் நிச்சயம் செய்தனர்.
15
கல்யாணம் முடிந்தவுடன் தன் காதலை பெற்றோரிடம் கூற எரிமலையாக வெடித்தார்கள் இராஜியும் இராமனாதனும்.
10
இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் புரிந்தனர்.
7
இதுவரை அவனது பெற்றோரும் உயிருக்கு உயிரான தங்கையும் எப்படி இருக்கிறார்கள் என அவனுக்கு தெரியாது.
11
அவன் திருமணம் பின் அனைவரும் கோவை சென்று விட்டனர் என்பதை மட்டுமே அறிவான்.
10
இங்க யாரு ஆதிதேவ் என கேட்ட செவிலியரின் குரல் மூலம் நிகழ்காலத்திற்கு வந்தான் ஆதி.
11
நான் தான் என அவன் எழ உங்க மனைவி ரொம்ப வீக்கா இருக்காங்க.
10
டிரிப்ஸ் போட்டு இருக்கோம்.
3
என கூறினார்.
2
நோ பிராப்ளம் என்றதும் அவர் சென்றுவிட தன் தாய் தந்தைக்கு விஷயத்தை சொல்ல போன் பண்ணினான்.
12
கால் அட்டெண்ட் செய்த இராமநாதன் ஹலோ என்றார்.
6
அப்பா.
1
நான் ஆ.... தி... ப்பா என சொல்ல சொல்ல கால் கட் ஆனது.
10
அவன் அவர்களை அழைப்பதும் அவர்கள் துண்டிப்பதும்... அதனால் மீண்டும் ஒரு முறை அவன் அழைக்க இந்த முறை இராஜி எடுத்தார்.
15
ம்மா.
1
ப்ளீஸ் கட் பண்ணிறாதீங்க..... முக்கியமான விஷயம் சொல்லனும் என்று கெஞ்சினான்.
8
மறுபக்கம் அமைதியாக இருக்க ம்மா நீங்க பாட்டி ஆகப்போறிங்க என்றான்.
8
கோபத்தில் கொதித்து கொண்டிருந்த அவர் மனதில் யாரோ பனிக்கட்டி வைத்தது போல் குளுமை அடைந்தது .
12
உண்மையா வாடா என கேட்க ஆமாம் மா.
6
இன்னைக்கு தான் தெரிஞ்சுது.
3
அதான் கூப்பிட்டேன் என்று மகிழ்ச்சியில் கூறினான்.
5
ரொம்ப சந்தோஷம் பா.
3
மது எங்க அவளுக்கு டிரிப்ஸ் ஏத்துது.
5
என்றான்.
1
அவங்க வீட்டிலையும் சொல்லுங்க.
3
நாங்க நாளைக்கே ஊட்டி வரோம் என அழைப்பை துண்டித்தார்.
7
அவரை பார்த்து கொண்டிருந்த இராமநாதனை கண்டவள் ஏங்க அப்படி பாக்கிறிங்க.
8
நாம எவ்ளோ நாள் பேரக்குழந்தை இல்லன்னு அழுதிருப்போம்.
6
நம்ம சாதனாக்கு தான் குடுப்பனை இல்லை.
5
வேண்டாத கோயில் இல்லை.
3
கும்பிடாத சாமி இல்லை.
3
அவளுக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை னு சொல்லிடாங்களே என கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்தவர்.
12
கடவுளே பார்த்து நமக்கு இந்த செல்வத்தை கொடுத்திருக்கார்.
6
நாம போலாம் என்று அவரை சமாதானப்படுத்தினார்.
5
அடுத்த நாள் காலை இரு வீட்டு பெரியவர்களும் ஊட்டி வர வீடு பழைய சந்தோஷத்துடன் இருந்தது.
12
மதுபாலாவும் ஆதிதேவ்வும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
4
தேவ் என பெண் குரல் கேட்க சாது என கத்தியவன் கண்களில் கண்ணீர் வந்தது.
11
ஒவ்வொரு துளி கண்ணீரும் அவள் மீதிருந்த பாசத்தை காமிக்க அதை துடைத்தவன் எப்படி டா இருக்க என்று நலம் விசாரித்தான்.
15
ம்ம்.
1
நல்லா இருக்கேன்.
2
சாரி டா.
2
இதன் வீட்டுக்காரர் அப்பா அம்மா உங்கிட்ட பேசற வரைக்கும் என்னையும் பேச வேணாம் சொல்டாங்க என மன்னிப்பு கேட்க பரவாயில்லை சாது என்றான்.
17
ஆமா நீ ஏன் எங்கிட்ட உன் காதலை சொல்லல.
7
என கற்பிக்க அவளே என்கிட்ட லேட்டா தான் சொன்னா.
7
அப்புறம் எப்படி சொல்ல என வருத்தப்பட்டான்.
5
ஆமா.
1
சரியான அழுத்தக்காரி.
2
அவகிட்ட போன் கொடு என்றாள்.
4
அவளை பற்றி அன்னையிடம் இருந்து கேட்டறிந்தவன் தப்பி தவறி கூட குழந்தை பற்றி கேட்கவில்லை.
11
அவள் மதுவுடன் பேச அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
6
நாட்கள் வேகமாக ஓட மூன்றாம் மாதத்தில் மது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்க்கிறார்கள் என தெரிய வந்தது.
13
இரட்டிப்பு மகிழ்ச்சியில் அனைவரும் இருக்க நாட்கள் வேகமாக உருண்டு ஓடியது.
8
வளைகாப்பு நாளும் வர ஒவ்வொரு வராய் மஞ்சள் சந்தனம் குங்குமம் பூசி பரிசு பொருள் ஒன்றுகொடுத்தும் அவளை வாழ்த்தினர்.
14
சாதனா முறை வர பலர் வேண்டாம் என சொல்ல மதுபாலா பிடிவாதத்துடன் அவளை நலுங்கு செய்ய வைத்தாள்.
13
தோழியின் அன்பில் கண்கள் கலங்க மதுவை பார்த்தாள் சாதனா.
7
என்ன கிப்ட் வேணும் சொல்லுடி என அவள் கன்னம் பற்றி கேட்க நான் கேட்டா கண்டிப்பா நீ செய்யனும் .
15
கண்டிப்பா.
1
சொல்லு என சாதனா வாக்குறுதி தர டெலிவரி அப்போ கேட்கிறேன்.
8
நீயும் அண்ணாவும் செய்யனும் என எதிர்ப்பார்புடன் கேட்டாள்.
6
ம்ம்.
1
என அவள் தலையாட்டி செல்ல மனைவி என்ன கேட்க போகிறாள் என்பதை ஊகித்த ஆதி அவளை நினைத்து பெருமிதம் கொண்டான்.கண்களாலிலேயே அவளிடம் கவிதை வாசித்தான் தேவ்.
19
டெலிவரி நாளும் வர மதுபாலாவை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
6
அனைவரும் ஊட்டி ஹாஸ்பிடலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.
7
அறை மணி நேரத்தில் குழந்தைகளின் அழகை குரல் கேட்க அனைவரும் மகிழ்ந்தனர்.
9
ஆதிதேவ் மதுபாலா விற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.
11
அவள் அருகில் வந்த ஆதிதேவ் தேங்கஸ் டி என் செல்ல பெண்டாட்டி என முன் நெற்றியில் முத்தம் வைத்தான்.
14
புன்னகைத்தவள் தொட்டிலில் ஆடிய குழந்தைகளை பார்த்தாள்.
5
இரண்டு செல்வங்களும் கை கால்களை உதைத்து கொண்டிருந்தனர்.
6
அவளுடைய தாய் இரண்டு குழந்தைகளையும் தூக்கி அவளருகில் வந்து காண்பித்தார்.
8
ஆண் குழந்தையை வாங்கியவள் முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தாள்.
8
ஆதி அவளது தோள்களை அழுத்தி பற்ற அவள் சாது என்றாள்.
8
அந்த இடத்தில் தனக்கு இந்த குடுப்பனை இல்லியே என கலங்கியபடி நின்றிருந்தவள் மதுபாலாவின் குரல் கேட்டு முன் வந்தாள்.
14
அன்னைக்கு கிப்ட் என்ன வேணும்னு கேட்டியே.
5
இப்போ கேட்கவா என்றாள்.
3
சொல்லுடி என அவள் உந்த என் வயிற்றில் உதித்த இந்த ஜீவன் இனி மாதவன் சாதனா பிள்ளையாக வளருனும் என்று கைகளில் இருந்து குழந்தையை அவள் முன் நீட்டினாள்.
21
அங்கிருந்த அனைவரும் அதிர சாதனா கண்கள் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
9
தடுமாறி கீழே விழ போனவளை மாதவன் தாங்க இவன பெத்தது வேணா நானா இருக்கலாம்.
11
ஆனா இவன் உன் பிள்ளைடி.
4
நீ தான் இனி இவனுக்கு எல்லாமே.
5
உனக்குஇந நியாபகம் இருக்கா நாம காலேஜ் படிக்கும்போ உனக்கு பையனும் எனக்கு பெண்ணும் வேணும்னு சொல்லிப்போமே...... அதான்டி..... அவனுக்கு நீ தான் இனிமே யசோதை.
18
நான் தேவகி மட்டுமே.
3
என்றாள்.
1
பாலா என அவளது பெற்றோர் கத்த ப்ளீஸ்.
6
யாரும் எதுவும் சொல்லிடாதீங்க.
3
எனக்கு இப்படி ஒரு அன்பான கணவன் அழகான குடும்பம் கிடைக்க முதன் முதல் காரணம் அவளிடம் கிடைத்த நட்பு.
14
அதுக்கு நான் திருப்பி ஏதாவது செய்யனும் தோணுச்சு அதான்.
7