text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
உங்களின் அன்றைய தின வணிக திட்டம் இலாபத்திலா அல்லது நஷ்டத்திலோ முடிந்தவுடன் அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளை அன்று பார்ப்பது உத்தமம்.
| 16 |
உதாரணத்திற்கு நீங்கள் ஷார்ட் போன பங்கு மேலும் இறங்கினால் அடுத்த ரவுண்ட் போகலாம் என்ற எண்ணமே கூடாது.
| 13 |
இந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் எண்ணம் காலையில் மிகச் சரியாக டெக்னிகல் பார்த்து இலக்கினை நிர்ணயித்தோம்.
| 12 |
அடுத்த நிலைக்கு அதுபோகும்போது இன்னொரு ரவுண்ட் போய் சிறிது இலாபம் பார்த்து விடலாம்.
| 10 |
அதை துடைத்துதெறிந்து விட்டு வேறு வேலை பார்ப்பது தான் நல்லது.
| 8 |
உண்மைநிலையை விளக்கிக் சொல்ல மென்மையான வார்த்தைகள் உதவாது.
| 6 |
டெக்னிகல் அனாலிஸ் என்பது தேவையற்றது அவை உபயோகமில்லை என்று நான் கூறவில்லை.
| 9 |
அவற்றை கண்முடித்தனமாக நம்பக் கூடாது என்பதையே சொல்ல வருகின்றேன்.
| 7 |
ஏனென்றால் மேற்கண்ட பத்தியை தவறாக புரிந்துக் கொள்ளக் கூடிய சாத்தியமுண்டு என்பதால் இந்த விளக்கம்.
| 11 |
நான் அம்மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கின்றேன்.
| 5 |
பெரும்பாலும் ஆன்மீக தலங்களை தரிசித்துவிட்டு வந்து கடந்த சில நாட்களாக சந்தையை பற்றி எந்த விவரங்களையும் படிக்காமல் சந்தை கடைசியாக முடிந்த நிலையை மட்டும் பார்த்துவிட்டு தின வணிகத்தில் இறங்குவார்கள்.
| 22 |
எத்தனை வருடங்களாக சந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் சந்தை எங்கே ஏறும் எங்கே சறுக்கும் என்று எனக்கு தெரியாதா என்று டயலாக் அடிப்பவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது.
| 19 |
அந்த மனநிலையில் வணிகம் செய்பவர்களை கூர்ந்து ஒரு மாதகாலம் கவனித்தீர்களென்றாலே உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் தெரிந்துவிடும்.
| 13 |
பங்கு சந்தையில் நுழைந்த ஒவ்வொருவரும் முதலில் ஈர்க்கப்படுவது தின வணிகத்தில்தான்.
| 8 |
குறிப்பாக எந்த அனுபவமும் இல்லாமல் குழுமங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட இதில் மிகுந்த உற்சாகமாக ஈடுபடுவார்கள்.
| 14 |
சிலருக்கு முதல் சில தின வணிகங்களில் இலாபம் கூட கிடைக்கலாம்.இவர்கள் இதனை பங்கு சந்தை என்று பார்த்தால் கூட என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டக் கூடம் என்று தான் சொல்வேன்.
| 26 |
சிலர் முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
| 8 |
குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
| 6 |
வாரன் பப்பெட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
| 5 |
பங்கு சந்தை முதலீட்டை மட்டுமே மேற்கொண்டு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரானவர்.
| 8 |
அதற்கு பிறகு வந்த ஒரு பெரும் அமெரிக்க பங்கு சந்தை சரிவில் அனைவரும் விற்றுவிட்டு ஒடும்போது இவர் பெரும் தொகையுடன் நுழைந்தார்.
| 16 |
பத்து வருடங்கள் காத்திருக்கும் அளவிற்கு பொறுமை.
| 5 |
நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
| 7 |
தின வணிகத்தில் நாம் எவ்வாறு ஈடுபடபோகிறோம் என்பதை விட எங்கிருந்து ஈடுபட போகிறோம் என்பதை முதலில் பார்ப்போம்.
| 13 |
நாம் பொதுவாக கீழ்க்கண்ட வகையில் தின வணிகம் செய்து கொண்டிருக்கிறோம்.
| 8 |
சந்தையின் தீடீர் சரிவு ஏற்றம் போன்றவை நமக்கு உடனே தெரியும்.
| 8 |
அதற்கேற்ப நாமும் தயார்நிலையில் இருப்போம்.
| 4 |
அங்கு தவிர்க்க வேண்டியது என்னவெனில் .
| 5 |
உங்களை போலவே நிறைய பேர் பல்வேறு வணிக குறிப்புகளுடன் வந்திருப்பார்கள்.
| 8 |
சிலர் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்வார்கள்.
| 6 |
அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் காலையில் என்ன திட்டத்தில் வந்திருக்கின்றீர்களோ அதை மட்டும் பார்த்தால் நல்லது.
| 13 |
முதலில் காலையில் உள்ளே வரும்போது நீங்கள் தின வணிகம் செய்யபோகும் பங்குகளுக்கான வணிக குறிப்புகளுடன் நுழைவது அவசியம்.
| 13 |
அங்கே போய் எது ஏறுதோ அதை பிடிப்போம் என குதிரைப் பந்தய நிலையில் நுழையவே கூடாது.
| 12 |
அனுபவம் இல்லாதவர்கள் ஒரு பங்கிற்கு மேல் கவனம் செலுத்தமால் இருத்தல் நலம்.
| 9 |
சந்தை துவங்கிய பிறகு நீங்கள் தின வணிகம் செய்யும் பங்குகளின் நிலையை மட்டும் கவனமாக பார்த்தால் போதும்.
| 13 |
அப்போதுதான் உங்கள் அருகிலுள்ளவர் வந்துடுச்சி.
| 4 |
இவன் பாய போறான் பாரு.
| 4 |
பார்த்துக்கிட்ட இரு என்று சொல்லி செய்தாலும் நீங்கள் கவனத்தை விலக்காமல் இருக்க ஒரு அசாத்தியமான தேவை.
| 12 |
நீங்கள் அந்த பாயும் புலியை பார்த்துக் கொண்டே இருந்தால் உங்கள் பண்ணி விடுவார்கள்.
| 10 |
வீட்டிலிருந்து செய்பவர்கள் என்றால் அங்கும் இருக்க வாய்ப்புண்டு.
| 6 |
முக்கியமாக இணைய தொடர்பு மற்றும் மின்சாரம்.
| 5 |
இணைய தொடர்பு துண்டிக்கப்படுதல் மற்றும் மின் தடை இவற்றை எதிர்பார்த்து அதற்கேற்ப கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.
| 13 |
இவை மட்டுமில்லாமல் கூட இருக்க வாய்ப்புண்டு.
| 5 |
ஏங்க சோப்பு தீர்ந்து போயிடுச்சி.
| 4 |
வாங்கிட்டு வாங்களேன்.
| 2 |
நீங்கள் கடைக்கு போய் சோப்பு வாங்கி வருவதற்குள் சந்தை உங்களை குளிப்பாட்டி விட்டிருக்கும்.
| 10 |
அலுவலகத்திலிருந்து பயணத்தின்போது சிலர் தின வணிகம் செய்யலாம்.
| 6 |
அலுவலகத்திலிருந்து என்றால் ஒவ்வொரு தடவையும் சூப்பர்மேன் தன் உடையை மாற்ற மறைவிடத்திற்கு செல்வது போல செல்போனை துாக்கிக் கொண்டு மறைவிடத்திற்கு சென்று உங்கள் பங்குகளின் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
| 21 |
அலுவலகப் பணியும் பாதிக்கப்படும்.
| 3 |
பயணத்தின்போது மிகவும் அதிகம்.
| 3 |
செல்போனில் ஆர்டர்கள் சொல்லும்போது பிற இரைச்சல்கள் உங்களை பாதிக்கும்.
| 7 |
உங்கள் ஆர்டரை செல்போனில் நீங்கள் சொல்லும்போது நேற்று இராத்திரி யம்மா பாட்டு உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
| 12 |
உங்கள் பங்கு தரகரும் சரியாக புரிந்துக் கொள்ளாமல் வேறு எதையாவது செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
| 10 |
முதலில் தின வணிகத்திற்கு தேவை என்று பார்த்தோமென்றால் மிகத் தெளிவான திட்டம்.
| 9 |
தின வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் ஸ்டாப் லாஸ் பற்றியே யோசித்திருக்க மாட்டார்கள்.
| 10 |
வாங்கும் விலை இலக்கு விலை இவையிரண்டும் மட்டுமே தெரியும்.
| 7 |
ஸ்டாப் லாஸ் என்று கொடுத்திருந்தால் கூட அதை பொருட்படுத்துவதில்லை.
| 7 |
இவ்வளவு இலாபம் என்று கணக்கிடும்பொழுதே இவ்வளவு நஷ்டம் மட்டுமே வரும் என்ற கணக்கீடும் முக்கியம்.
| 11 |
இரண்டாவது அம்சம் பொறுமை.
| 3 |
ஆம்.
| 1 |
தின வணிகத்திலும் பொறுமை மிக முக்கியம்.
| 5 |
அடுத்த ஒரு மணிநேரத்திலேயே இலக்கு விலையை எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வாறு எட்டாவிடில் அதை விட்டுவிட்டு நமது திட்டத்தில்லாத வேறு ஒரு பங்கிற்கு தாவுவது தவிர்க்கப்பட வேண்டும்.
| 21 |
முன்றாவது சுய கட்டுப்பாடு.
| 3 |
உங்கள் பங்குகள் அதன் இலக்கினை ஒரு மணி நேரத்திலேயோ அதற்குள்ளேயே எட்டி விட்டால் சந்தையை விட்டு ஒதுங்கியிருப்பது உத்தமம்.
| 14 |
சந்தையை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்று சொல்லவில்லை.
| 6 |
அவ்வாறு செய்வதும் தவறில்லை.
| 3 |
சந்தையில் வேறு எந்த வித தின வணிகமும் அன்றைய தினம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
| 11 |
சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லியதற்கு நன்றிகள்.
| 7 |
அதில் இன்னும் சில பகுதிகள் விட்டுப் போயிருக்கின்றன.
| 6 |
தின வணிகத்தை பொறுத்தவரை தரகு நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள தொகை மற்றும் பங்குகளின் மதிப்பினை பொறுத்து ஐந்து முதல் பத்து மடங்கு வரை அதிகமாக கொடுக்கின்றன.
| 19 |
இதனை மார்ஜீன் வணிகம் என்று சொல்வார்கள்.
| 5 |
தரகு கட்டணமும் வணிகத்தை விட குறைவாகவே வசூலிக்கின்றன.
| 6 |
காரணம் என்னவென்றால் வணிகம் செய்வதற்கு உங்களுக்கு மிக அதிகமான தொகை கிடைக்கின்றது.
| 9 |
அதனை வைத்து நீங்கள் பங்குகளை வாங்கினாலும் அன்றைய தினக் கடைசிக்குள் கணக்கு முடித்துவிட வேண்டும்.
| 11 |
பங்கு தரகு நிறுவனத்திற்கு அதிக தரகு கட்டணம் கிடைக்கும்.
| 7 |
இதில் பங்கு தரகு நிறுவனங்களை தவறு சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
| 9 |
அவர்கள் உங்களுக்கு மட்டுமே கொடுக்கின்றார்கள்.
| 4 |
வணிகம் செய்வது நாம்தானே.
| 3 |
பங்கு முதலீட்டில் ஈடுபட்டு அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான வாரன் பப்பெட் தின வணிகமே செய்ததில்லை என்பது தெரியுமா அவர் ஒரே நாளில் ஒரே ஆண்டில் கோடீஸ்வரராகவும் இல்லை.
| 21 |
சூதாட்டத்திற்கு மனம் அடிமையாவது போல் தின வணிகத்தையும் சிலர் வெறி பிடித்தது போல் செய்கின்றார்கள்.
| 11 |
ஆயிரம் ருபாயை இழந்து எப்போதாவது கிடைக்கும் நுாறு ருபாய்க்காக எந்த ஒரு அடிப்படையும் தெரியாமல் பல்வேறு விதமான பங்குகளை பல்வேறு இடங்களில் கிடைக்கும் பரிந்துரைகளின் பேரில் வாங்கி பணத்தை இழக்கின்றார்கள்.
| 22 |
இதில் நமக்கென்ன வந்தது அவர்களாகவே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கவே கூடாது.
| 17 |
இவ்வாறு நஷ்டமடைந்தவர்கள் தான் பங்கு சந்தை ஆபத்தானது என்ற ஒரு நிலையை மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
| 12 |
பங்கு சந்தையில் இறங்குவதால் என்ன நன்மைகள் இருக்கின்றன என்று பார்க்கும்பொழுது பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்னென்ன கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது தவறான கொள்கைகளை தேர்ந்தெடுக்கும்போது சந்தை பாதிக்கப் படுகின்றது அதனால் நம்முடைய முதலீடும் பாதிக்கப் படுகின்றது.
| 30 |
இவ்வாறு யோசிப்பதன் முலம் நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் இலவசங்களை காட்டி நம்மை ஏமாற்ற இயலாது.
| 15 |
ஏனென்றால் அவர்களின் ஒவ்வொரு தவறான முடிவுகளிலும் பாதிக்கப் படுவது நம்முடைய முதலீடு.
| 9 |
மேலும் நம்முடைய சொந்த பணத்தை முதலீடாக போட்டிருப்பதால் தேர்தலின்போது எந்த கட்சி சார்பான ஒரு ஆதரவையும் நாம் எடுக்காமல் ஒரு நடுநிலை தன்மையுடைய முடிவினை கட்சியின் கொள்கைகளுக்கேட்ப எடுக்க இயலும்.
| 22 |
இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது.
| 5 |
வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா உட்பட உள்ள அரசியல்வாதிகள் அவர்கள் நாட்டு மக்களை மிகவும் எளிதாக ஏமாற்ற இயலாது.
| 13 |
நிறைய கஷ்டப்பட்டுதான் ஏமாற்றுகின்றார்கள்.
| 3 |
தின வணிகம் குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கின்றது.
| 7 |
தின வணிகம் செய்வதற்கு பற்றி தெரிய வேண்டும்.
| 6 |
பல்வேறு அலசும் திறனும் வேண்டும்.நானும் தின வணிகம் செய்கின்றேன்.
| 7 |
ஆனால் தினமும் அல்ல.
| 3 |
தற்போதைய சந்தை நிலவரம் தின வணிகம் செய்தவற்கு ஏற்றதாக இல்லை.
| 8 |
நல்ல செய்திகள் மற்றும் கெட்ட செய்திகள் எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழல் நிலவுகின்றது.
| 11 |
நம் சந்தையை பொறுத்தவரையில் தற்போது இன்னும் இறங்கக் கூடிய சூழ்நிலையில்தான் உள்ளது.
| 9 |
மிக வேகமாக இறங்குவதற்கான சூழ்நிலையே தற்போது உள்ளது.
| 6 |
தற்போதைய சந்தை முதலீட்டுக்கெற்ற சந்தை.
| 4 |
உங்களில் பலர் வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வணிகம் செய்பவர்களாக இருந்தால் தின வணிகத்தை சில நாள் ஒதுக்கி வைத்திருப்பது நல்லது.
| 16 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.